Leviticus 23:13 in Tamil
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒருமரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
Karththarukkus sugantha vaasanaiyaana thaganabaliyaaga orumarakkaalilae paththil irandu pangaanathum enneyilae pisainthathumaana melliya maavaagiya pojanabaliyaiyum, thiraatchappazharasaththilae kaarpadiyaagiya paanabaliyaiyum seluththakkadaveerkal.
Leviticus 23:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
- Open Tamil Contemporary Version
- அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்.
Leviticus 23:13 in English
- King James Version (KJV)
- And the meat offering thereof [shall be] two tenth deals of fine flour mingled with oil, an offering made by fire unto the LORD [for] a sweet savour: and the drink offering thereof [shall be] of wine, the fourth [part] of an hin.
- World English Bible (WEB)
- The meal offering with it shall be two tenths of an ephah of fine flour mixed with oil, an offering made by fire to the LORD for a pleasant aroma; and the drink offering with it shall be of wine, the fourth part of a hin.
- American Standard Version (ASV)
- And the meal-offering thereof shall be two tenth parts [of an ephah] of fine flour mingled with oil, an offering made by fire unto Jehovah for a sweet savor; and the drink-offering thereof shall be of wine, the fourth part of a hin.
- Bible in Basic English (BBE)
- And let the meal offering with it be two tenth parts of an ephah of the best meal mixed with oil, an offering made by fire to the Lord for a sweet smell; and the drink offering with it is to be of wine, the fourth part of a hin.
- Darby Translation (DBY)
- and the oblation thereof: two tenths of fine flour mingled with oil, an offering by fire to Jehovah for a sweet odour; and the drink-offering thereof, of wine, a fourth part of a hin.
- Webster's Bible (WBS)
- And the meat-offering thereof [shall be] two tenth-parts of fine flour mingled with oil, an offering made by fire to the LORD [for] a sweet savor: and the drink-offering thereof [shall be] of wine, the fourth [part] of a hin.
- Young's Literal Translation (YLT)
- and its present two tenth deals of flour mixed with oil, a fire-offering to Jehovah, a sweet fragrance, and its drink-offering, wine, a fourth of the hin.
Read in context
- 11உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
- 12நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
- 13கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒருமரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
- 14உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக் கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
- 15நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டை கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
Cross references
- Leviticus 2:14–16 லேவியராகமம் 2:14–16முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய். அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி. பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.
- Leviticus 6:20 லேவியராகமம் 6:20ஆரோன் அபிஷேகம் பண்ணப் படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச்செலுத்தக்கடவர்கள்.
- Joel 1:9 யோவேல் 1:9போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.
- Exodus 30:9 யாத்திராகமம் 30:9அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
- Ezekiel 46:14 எசேக்கியேல் 46:14அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொருபங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
- Numbers 28:10 எண்ணாகமம் 28:10நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
- Ezekiel 45:24 எசேக்கியேல் 45:24ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.
- Numbers 15:3–12 எண்ணாகமம் 15:3–12விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலூகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது, தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். பானபலியாக காற்படி திரட்சரசத்தையும் படைக்கவேண்டும். ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும். நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொருமாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத் தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.
- Exodus 29:40–41 யாத்திராகமம் 29:40–41ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக. மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.
- Leviticus 14:10 லேவியராகமம் 14:10எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
- Joel 2:14 யோவேல் 2:14ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
- Ezekiel 4:11 எசேக்கியேல் 4:11தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
Original words (Hebrew)
- offering · H4503מִנְחָה minchâh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- deals · H6241עִשָּׂרוֹן ʻissârôwn
- flour · H5560סֹלֶת çôleth
- mingled · H1101בָּלַל bâlal
- oil · H8081שֶׁמֶן shemen
- fire · H801אִשָּׁה ʼishshâh
- sweet · H5207נִיחוֹחַ nîychôwach
- savour · H7381רֵיחַ rêyach
- offering · H5262נֶסֶךְ neçek
- wine · H3196יַיִן yayin
- fourth · H7243רְבִיעִי rᵉbîyʻîy
- hin · H1969הִין hîyn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.