Numbers 18:19 in Tamil
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும்நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
Isravael puththirar karththarukku aereduththup padaikkira parisuththa padaippugalaiyellaam unakkum un kumaararukkum un kumaaraththigalukkumniththiya kattalaiyaagak koduththaen; karththarudaiya sannithiyil ithu unakkum un santhathikkum endraikkum sellum maaraatha udanpadikkai endraar.
Numbers 18:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; யெகோவாவுடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை” என்றார்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் கொண்டுவரும் பரிசுத்த காணிக்கைகளிலிருந்து பிரித்து எடுக்கும் எதையும் நான் உனக்கும், உன் மகன்களுக்கும், மகள்களுக்கும், உங்களுடைய நிரந்தர பாகமாகக் கொடுக்கிறேன். இது யெகோவாவுக்கு முன்பாக உனக்காகவும், உன் சந்ததியினருக்காகவும் உப்பினால் செய்யப்படும் ஒரு நிரந்தர உடன்படிக்கையாய் இருக்கும்” என்றார்.
- Tamil Easy Reading Version
- ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உங்களுக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.
Numbers 18:19 in English
- King James Version (KJV)
- All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: it [is] a covenant of salt for ever before the LORD unto thee and to thy seed with thee.
- World English Bible (WEB)
- All the wave offerings of the holy things which the children of Israel offer to the LORD, I have given you and your sons and your daughters with you, as a portion forever. It is a covenant of salt forever before the LORD to you and to your offspring with you.”
- American Standard Version (ASV)
- All the heave-offerings of the holy things, which the children of Israel offer unto Jehovah, have I given thee, and thy sons and thy daughters with thee, as a portion for ever: it is a covenant of salt for ever before Jehovah unto thee and to thy seed with thee.
- Bible in Basic English (BBE)
- All the lifted offerings of the holy things which the children of Israel give to the Lord, I have given to you and to your sons and to your daughters as a right for ever. This is an agreement made with salt before the Lord, to you and to your seed for ever.
- Darby Translation (DBY)
- All the heave-offerings of the holy things, which the children of Israel offer to Jehovah, have I given thee, and to thy sons and to thy daughters with thee, by an everlasting statute: it shall be an everlasting covenant of salt before Jehovah unto thee and thy seed with thee.
- Webster's Bible (WBS)
- All the heave-offerings of the holy things, which the children of Israel offer to the LORD, have I given to thee, and to thy sons and thy daughters with thee, by a statute for ever: it [is] a covenant of salt for ever before the LORD to thee and to thy seed with thee.
- Young's Literal Translation (YLT)
- all the heave-offerings of the holy things which the sons of Israel lift up to Jehovah I have given to thee and to thy sons, and to thy daughters with thee, by a statute age-during, a covenant of salt, age-during it [is] before Jehovah, to thee and to thy seed with thee.'
Read in context
- 17மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
- 18அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
- 19இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும்நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
- 20பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
- 21இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
Cross references
- 2 Chronicles 13:5 2 நாளாகமம் 13:5இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க்கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?
- Numbers 18:11 எண்ணாகமம் 18:11இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும்நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.
- Leviticus 2:13 லேவியராகமம் 2:13நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
- Leviticus 7:14 லேவியராகமம் 7:14அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
- 2 Chronicles 31:4 2 நாளாகமம் 31:4ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
- Deuteronomy 12:6 உபாகமம் 12:6அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,
- Numbers 31:41 எண்ணாகமம் 31:41கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
- Numbers 31:29 எண்ணாகமம் 31:29அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
- Numbers 15:19–21 எண்ணாகமம் 15:19–21தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும் போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள். உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும். இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.
- Numbers 18:8 எண்ணாகமம் 18:8பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
Original words (Hebrew)
- offerings · H8641תְּרוּמָה tᵉrûwmâh
- things · H6944קֹדֶשׁ qôdesh
- children · H1121בֵּן bên
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- offer · H7311רוּם rûwm
- given · H5414נָתַן nâthan
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
- statute · H2706חֹק chôq
- ever · H5769עוֹלָם ʻôwlâm
- covenant · H1285בְּרִית bᵉrîyth
- salt · H4417מֶלַח melach
- ever · H5769עוֹלָם ʻôwlâm
- before · H6440פָּנִים pânîym
- seed · H2233זֶרַע zeraʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.