Psalm 133:2 in Tamil
அதுஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்லதைலத்துக்கும்,
Athuaaronudaiya sirasinmael ootrappattu, avanudaiya thaadiyilae vadigirathum, avanudaiya angigalinmael irangugirathumaana nallathailaththukkum,
Psalm 133:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
- Open Tamil Contemporary Version
- அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; ஆரோனின் தாடியில் வடிந்து, அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
Psalm 133:2 in English
- King James Version (KJV)
- [It is] like the precious ointment upon the head, that ran down upon the beard, [even] Aaron’s beard: that went down to the skirts of his garments;
- World English Bible (WEB)
- It is like the precious oil on the head, that ran down on the beard, even Aaron’s beard, that came down on the edge of his robes,
- American Standard Version (ASV)
- It is like the precious oil upon the head, That ran down upon the beard, Even Aaron’s beard; That came down upon the skirt of his garments;
- Bible in Basic English (BBE)
- It is like oil of great price on the head, flowing down over the face, even Aaron's face: coming down to the edge of his robe;
- Darby Translation (DBY)
- Like the precious oil upon the head, that ran down upon the beard, upon Aaron's beard, that ran down to the hem of his garments;
- Webster's Bible (WBS)
- [It is] like the precious ointment upon the head, that ran down upon the beard, [even] Aaron's beard: that went down to the skirts of his garment;
- Young's Literal Translation (YLT)
- As the good oil on the head, Coming down on the beard, the beard of Aaron, That cometh down on the skirt of his robes,
Read in context
- 1இதோ, சகோதரர் ஒருமித்துவாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
- 2அதுஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்லதைலத்துக்கும்,
- 3எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (ஆரோகண சங்கீதம்.)
Cross references
- Leviticus 8:12 லேவியராகமம் 8:12அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
- Exodus 30:25–30 யாத்திராகமம் 30:25–30அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது. அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும், தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும். ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
- Exodus 29:7 யாத்திராகமம் 29:7அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.
- Proverbs 27:9 நீதிமொழிகள் 27:9பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
- Exodus 39:24 யாத்திராகமம் 39:24அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,
- John 12:3 யோவான் 12:3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
- Song of Solomon 1:3 உன்னதப்பாட்டு 1:3உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
- Psalm 141:5 சங்கீதம் 141:5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
- Exodus 28:33 யாத்திராகமம் 28:33அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளப்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணி வைக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.