Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 14 in Tamil

Present
  1. 1

    தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

    To the chief Musician, [A Psalm] of David. The fool hath said in his heart, [There is] no God. They are corrupt, they have done abominable works, [there is] none that doeth good.

  2. 2

    தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.

    The LORD looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, [and] seek God.

  3. 3

    எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

    They are all gone aside, they are [all] together become filthy: [there is] none that doeth good, no, not one.

  4. 4

    அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

    Have all the workers of iniquity no knowledge? who eat up my people [as] they eat bread, and call not upon the LORD.

  5. 5

    அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.

    There were they in great fear: for God [is] in the generation of the righteous.

  6. 6

    சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.

    Ye have shamed the counsel of the poor, because the LORD [is] his refuge.

  7. 7

    சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். (தாவீதின் சங்கீதம்)

    Oh that the salvation of Israel [were come] out of Zion! when the LORD bringeth back the captivity of his people, Jacob shall rejoice, [and] Israel shall be glad.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.