Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 141 in Tamil

Present
  1. 1

    கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத் தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.

    A Psalm of David. LORD, I cry unto thee: make haste unto me; give ear unto my voice, when I cry unto thee.

  2. 2

    என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

    Let my prayer be set forth before thee [as] incense; [and] the lifting up of my hands [as] the evening sacrifice.

  3. 3

    கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

    Set a watch, O LORD, before my mouth; keep the door of my lips.

  4. 4

    அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.

    Incline not my heart to [any] evil thing, to practise wicked works with men that work iniquity: and let me not eat of their dainties.

  5. 5

    நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.

    Let the righteous smite me; [it shall be] a kindness: and let him reprove me; [it shall be] an excellent oil, [which] shall not break my head: for yet my prayer also [shall be] in their calamities.

  6. 6

    அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.

    When their judges are overthrown in stony places, they shall hear my words; for they are sweet.

  7. 7

    பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச்சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

    Our bones are scattered at the grave’s mouth, as when one cutteth and cleaveth [wood] upon the earth.

  8. 8

    ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.

    But mine eyes [are] unto thee, O GOD the Lord: in thee is my trust; leave not my soul destitute.

  9. 9

    அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.

    Keep me from the snares [which] they have laid for me, and the gins of the workers of iniquity.

  10. 10

    துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். (தாவீது கெபியிலிருக்கும்போதுபண்ணின விண்ணப்பமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.)

    Let the wicked fall into their own nets, whilst that I withal escape.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.