Psalm 50:22 in Tamil
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Thaevanai marakkiravarkalae, ithais sinthiththukkollungal; illaavittaal naan ungalaip peerippoduvaen, oruvarum ungalai viduvippathillai.
Psalm 50:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
- Open Tamil Contemporary Version
- “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள். உங்களைக் கிழித்தெறியும் முன்னர் நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்! அது நிகழந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
Psalm 50:22 in English
- King James Version (KJV)
- Now consider this, ye that forget God, lest I tear [you] in pieces, and [there be] none to deliver.
- World English Bible (WEB)
- “Now consider this, you who forget God, lest I tear you into pieces, and there be no one to deliver.
- American Standard Version (ASV)
- Now consider this, ye that forget God, Lest I tear you in pieces, and there be none to deliver:
- Bible in Basic English (BBE)
- Now keep this in mind, you who have no memory of God, for fear that you may be crushed under my hand, with no one to give you help:
- Darby Translation (DBY)
- Now consider this, ye that forget God, lest I tear in pieces, and there be no deliverer.
- Webster's Bible (WBS)
- Now consider this, ye that forget God, lest I tear [you] in pieces, and [there be] none to deliver.
- Young's Literal Translation (YLT)
- Understand this, I pray you, Ye who are forgetting God, Lest I tear, and there is no deliverer.
Read in context
- 20நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
- 21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல்நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
- 22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
- 23ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். (பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன் பாவத்தை உணர்த்தினபோது பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Cross references
- Job 8:13 யோபு 8:13தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்து போம்.
- Psalm 9:17 சங்கீதம் 9:17துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
- Hosea 4:6 ஓசியா 4:6என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.
- Psalm 7:2 சங்கீதம் 7:2சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
- Hosea 13:8 ஓசியா 13:8குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல்பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
- Jeremiah 2:32 எரேமியா 2:32ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
- Psalm 10:4 சங்கீதம் 10:4துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
- Deuteronomy 32:18 உபாகமம் 32:18உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
- Haggai 1:5 ஆகாய் 1:5இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
- Revelation 6:16–17 வெளிப்படுத்தின விசேஷம் 6:16–17பர்வதங்களையும் கன்மலைகளையும்நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
- Amos 2:14 ஆமோஸ் 2:14அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
- 2 Samuel 22:42 2 சாமுவேல் 22:42அவர்கள் நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களை ரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள்; அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.