Psalm 50 in Tamil
சங்கீதம் 50
- 1
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
A Psalm of Asaph. The mighty God, [even] the LORD, hath spoken, and called the earth from the rising of the sun unto the going down thereof.
- 2
பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
Out of Zion, the perfection of beauty, God hath shined.
- 3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
Our God shall come, and shall not keep silence: a fire shall devour before him, and it shall be very tempestuous round about him.
- 4
அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
He shall call to the heavens from above, and to the earth, that he may judge his people.
- 5
பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்என்பார்.
Gather my saints together unto me; those that have made a covenant with me by sacrifice.
- 6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
And the heavens shall declare his righteousness: for God [is] judge himself. Selah.
- 7
என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
Hear, O my people, and I will speak; O Israel, and I will testify against thee: I [am] God, [even] thy God.
- 8
உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
I will not reprove thee for thy sacrifices or thy burnt offerings, [to have been] continually before me.
- 9
உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
I will take no bullock out of thy house, [nor] he goats out of thy folds.
- 10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
For every beast of the forest [is] mine, [and] the cattle upon a thousand hills.
- 11
மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
I know all the fowls of the mountains: and the wild beasts of the field [are] mine.
- 12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
If I were hungry, I would not tell thee: for the world [is] mine, and the fulness thereof.
- 13
நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
- 14
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
Offer unto God thanksgiving; and pay thy vows unto the most High:
- 15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
And call upon me in the day of trouble: I will deliver thee, and thou shalt glorify me.
- 16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
But unto the wicked God saith, What hast thou to do to declare my statutes, or [that] thou shouldest take my covenant in thy mouth?
- 17
சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
Seeing thou hatest instruction, and castest my words behind thee.
- 18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
When thou sawest a thief, then thou consentedst with him, and hast been partaker with adulterers.
- 19
உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்; உன் நாவு சற்பனையைப்பிணைக்கிறது.
Thou givest thy mouth to evil, and thy tongue frameth deceit.
- 20
நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Thou sittest [and] speakest against thy brother; thou slanderest thine own mother’s son.
- 21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல்நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
These [things] hast thou done, and I kept silence; thou thoughtest that I was altogether [such an one] as thyself: [but] I will reprove thee, and set [them] in order before thine eyes.
- 22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Now consider this, ye that forget God, lest I tear [you] in pieces, and [there be] none to deliver.
- 23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். (பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன் பாவத்தை உணர்த்தினபோது பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Whoso offereth praise glorifieth me: and to him that ordereth [his] conversation [aright] will I shew the salvation of God.