Psalm 61 in Tamil
சங்கீதம் 61
- 1
தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
To the chief Musician upon Neginah, [A Psalm] of David. Hear my cry, O God; attend unto my prayer.
- 2
என் இருதயம் தொய்யும்போதுபூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
From the end of the earth will I cry unto thee, when my heart is overwhelmed: lead me to the rock [that] is higher than I.
- 3
நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
For thou hast been a shelter for me, [and] a strong tower from the enemy.
- 4
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
I will abide in thy tabernacle for ever: I will trust in the covert of thy wings. Selah.
- 5
தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
For thou, O God, hast heard my vows: thou hast given [me] the heritage of those that fear thy name.
- 6
ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Thou wilt prolong the king’s life: [and] his years as many generations.
- 7
அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
He shall abide before God for ever: O prepare mercy and truth, [which] may preserve him.
- 8
இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன். (எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
So will I sing praise unto thy name for ever, that I may daily perform my vows.