Psalm 78:53 in Tamil
அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.
Avarkal payappadaathabadikku avarkalaip paththiramaay vazhinadaththinaar; avarkal saththurukkalaik kadal moodippottathu.
Psalm 78:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
- Open Tamil Contemporary Version
- பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது.
- Tamil Easy Reading Version
- அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழி காட்டி நடத்தினார். தேவனுடைய ஜனங்கள் அஞ்ச வேண்டியது எதுவுமில்லை. தேவன் அவர்களது பகைவர்களைச் செங்கடலில் அமிழச் செய்தார்.
Psalm 78:53 in English
- King James Version (KJV)
- And he led them on safely, so that they feared not: but the sea overwhelmed their enemies.
- World English Bible (WEB)
- He led them safely, so that they weren’t afraid, but the sea overwhelmed their enemies.
- American Standard Version (ASV)
- And he led them safely, so that they feared not; But the sea overwhelmed their enemies.
- Bible in Basic English (BBE)
- He took them on safely so that they had no fear; but their haters were covered by the sea.
- Darby Translation (DBY)
- And he led them safely, so that they were without fear; and the sea covered their enemies.
- Webster's Bible (WBS)
- And he led them on safely, so that they feared not: but the sea overwhelmed their enemies.
- Young's Literal Translation (YLT)
- And He leadeth them confidently, And they have not been afraid, And their enemies hath the sea covered.
Read in context
- 51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;
- 52தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
- 53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.
- 54அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
- 55அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
Cross references
- Exodus 14:19–20 யாத்திராகமம் 14:19–20அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது; இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
- Exodus 15:10 யாத்திராகமம் 15:10உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
- Exodus 14:27–28 யாத்திராகமம் 14:27–28அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
- Psalm 136:15 சங்கீதம் 136:15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Exodus 14:15 யாத்திராகமம் 14:15அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.
- Hebrews 11:29 எபிரெயர் 11:29விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத் துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.