Psalm 86:5 in Tamil
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
Aandavarae, neer nallavarum, mannikkiravarum, ummai nokkik kooppidugira yaavarmaelum kirubai migunthavarumaayirukkireer.
Psalm 86:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
- Tamil Easy Reading Version
- ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
Psalm 86:5 in English
- King James Version (KJV)
- For thou, Lord, [art] good, and ready to forgive; and plenteous in mercy unto all them that call upon thee.
- World English Bible (WEB)
- For you, Lord, are good, and ready to forgive, abundant in loving kindness to all those who call on you.
- American Standard Version (ASV)
- For thou, Lord, art good, and ready to forgive, And abundant in lovingkindness unto all them that call upon thee.
- Bible in Basic English (BBE)
- You are good, O Lord, and full of forgiveness; your mercy is great to all who make their cry to you.
- Darby Translation (DBY)
- For thou, Lord, art good, and ready to forgive, and art of great loving-kindness unto all that call upon thee.
- Webster's Bible (WBS)
- For thou, LORD, [art] good, and ready to forgive; and abundant in mercy to all them that call upon thee.
- Young's Literal Translation (YLT)
- For Thou, Lord, [art] good and forgiving. And abundant in kindness to all calling Thee.
Read in context
- 3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
- 4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
- 5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
- 6கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
- 7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
Cross references
- Psalm 145:8–9 சங்கீதம் 145:8–9கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
- Joel 2:13 யோவேல் 2:13நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்குமனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
- Exodus 34:6 யாத்திராகமம் 34:6கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
- Psalm 103:8 சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
- Nehemiah 9:17 நெகேமியா 9:17அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
- Acts 2:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:21அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
- Psalm 25:8 சங்கீதம் 25:8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
- Psalm 145:18 சங்கீதம் 145:18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
- 1 John 4:8–9 1 யோவான் 4:8–9அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
- Ezekiel 36:37 எசேக்கியேல் 36:37கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல்வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.
- Psalm 86:15 சங்கீதம் 86:15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
- Ephesians 1:6–8 எபேசியர் 1:6–8தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த்தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகலஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.