Revelation 21:5 in Tamil
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
Singaasanaththinmael veetrirunthavar: itho, naan sagalaththaiyum puthithaakkugiraenendraar. pinnum, avar: intha vasanangal saththiyamum unmaiyumaanavaigal, ivaigalai ezhuthu endraar.
Revelation 21:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
- Open Tamil Contemporary Version
- அரியணையில் அமர்ந்திருந்தவர், “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்றார். மேலும் அவர், “இதை எழுதிவை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் சத்தியமுமாய் இருக்கின்றன” என்று சொன்னார்.
- Tamil Easy Reading Version
- சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
Revelation 21:5 in English
- King James Version (KJV)
- And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.
- World English Bible (WEB)
- He who sits on the throne said, “Behold, I am making all things new.” He said, “Write, for these words of God are faithful and true.”
- American Standard Version (ASV)
- And he that sitteth on the throne said, Behold, I make all things new. And he saith, Write: for these words are faithful and true.
- Bible in Basic English (BBE)
- And he who is seated on the high seat said, See, I make all things new. And he said, Put it in the book; for these words are certain and true.
- Darby Translation (DBY)
- And he that sat on the throne said, Behold, I make all things new. And he says [to me], Write, for these words are true and faithful.
- Webster's Bible (WBS)
- And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said to me, Write: for these words are true and faithful.
- Young's Literal Translation (YLT)
- And He who is sitting upon the throne said, 'Lo, new I make all things; and He saith to me, 'Write, because these words are true and stedfast;'
Read in context
- 3மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடையஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
- 4அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
- 5சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
- 6அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
- 7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
Cross references
- 2 Corinthians 5:17 2 கொரிந்தியர் 5:17இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
- Isaiah 42:9 ஏசாயா 42:9பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- Isaiah 43:19 ஏசாயா 43:19இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
- Revelation 19:9 வெளிப்படுத்தின விசேஷம் 19:9பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
- Revelation 20:11 வெளிப்படுத்தின விசேஷம் 20:11பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
- Revelation 4:2 வெளிப்படுத்தின விசேஷம் 4:2உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
- Revelation 22:6 வெளிப்படுத்தின விசேஷம் 22:6பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
- Revelation 1:19 வெளிப்படுத்தின விசேஷம் 1:19நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;
- Revelation 4:9 வெளிப்படுத்தின விசேஷம் 4:9மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
- Revelation 1:11 வெளிப்படுத்தின விசேஷம் 1:11அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
- Revelation 5:1 வெளிப்படுத்தின விசேஷம் 5:1அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- he · G3588ὁ ho
- sat · G2521κάθημαι káthēmai
- upon · G1909ἐπί epí
- throne · G2362θρόνος thrónos
- said · G2036ἔπω épō
- Behold · G2400ἰδού idoú
- make · G4160ποιέω poiéō
- things · G3956πᾶς pâs
- new · G2537καινός kainós
- And · G2532καί kaí
- said · G3004λέγω légō
- me · G3427μοί moí
- Write · G1125γράφω gráphō
- for · G3754ὅτι hóti
- these · G3778οὗτος hoûtos
- words · G3056λόγος lógos
- are · G1526εἰσί eisí
- true · G228ἀληθινός alēthinós
- and · G2532καί kaí
- faithful · G4103πιστός pistós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.