Revelation 9:6 in Tamil
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
Annaadkalil manusharkal saavaith thaediyum athaik kaanaathiruppaarkal, saagavaendumendru aasaippaduvaarkal, saavo avarkalukku vilagi odippom.
Revelation 9:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும்.
- Open Tamil Contemporary Version
- அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் காணமாட்டார்கள். அவர்கள் சாவதற்கு விரும்புவார்கள், ஆனால் சாவோ அவர்களைவிட்டு ஓடிப்போகும்.
- Tamil Easy Reading Version
- அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.
Revelation 9:6 in English
- King James Version (KJV)
- And in those days shall men seek death, and shall not find it; and shall desire to die, and death shall flee from them.
- World English Bible (WEB)
- In those days people will seek death, and will in no way find it. They will desire to die, and death will flee from them.
- American Standard Version (ASV)
- And in those days men shall seek death, and shall in no wise find it; and they shall desire to die, and death fleeth from them.
- Bible in Basic English (BBE)
- And in those days men will be hoping for death, and it will not come to them; and they will have a great desire for death, and death will go in flight from them.
- Darby Translation (DBY)
- And in those days shall men seek death, and shall in no way find it; and shall desire to die, and death flees from them.
- Webster's Bible (WBS)
- And in those days shall men seek death, and shall not find it; and shall desire to die, and death shall flee from them.
- Young's Literal Translation (YLT)
- and in those days shall men seek the death, and they shall not find it, and they shall desire to die, and the death shall flee from them.
Read in context
- 4பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராதமனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
- 5மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களைவேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.
- 6அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
- 7அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்டகுதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம்போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடையமுகங்கள்போலிருந்தன.
- 8அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
Cross references
- Jeremiah 8:3 எரேமியா 8:3இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- Luke 23:30 லூக்கா 23:30அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளைநோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
- Revelation 6:16 வெளிப்படுத்தின விசேஷம் 6:16பர்வதங்களையும் கன்மலைகளையும்நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
- Isaiah 2:19 ஏசாயா 2:19பூமியைத் தத்தளிக்கப்பண்ணக்கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
- Hosea 10:8 ஓசியா 10:8இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
- Job 7:15–16 யோபு 7:15–16அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது. இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்கவிரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
- Job 3:20–22 யோபு 3:20–22மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, அதற்காகச் சந்தோஷப்படுகிறநிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
- 2 Samuel 1:9 2 சாமுவேல் 1:9அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
- John 4:8–9 யோவான் 4:8–9அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- in · G1722ἐν en
- those · G1565ἐκεῖνος ekeînos
- days · G2250ἡμέρα hēméra
- shall · G2212ζητέω zētéō
- men · G444ἄνθρωπος ánthrōpos
- seek · G2212ζητέω zētéō
- death · G2288θάνατος thánatos
- and · G2532καί kaí
- shall · G2147εὑρίσκω heurískō
- not · G3756οὐ ou
- find · G2147εὑρίσκω heurískō
- it · G846αὐτός autós
- and · G2532καί kaí
- desire · G1937ἐπιθυμέω epithyméō
- die · G599ἀποθνήσκω apothnḗskō
- and · G2532καί kaí
- death · G2288θάνατος thánatos
- flee · G5343φεύγω pheúgō
- from · G575ἀπό apó
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.