Zechariah 9:3 in Tamil
தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
Theeru thanakku aranaikkatti, thoolaippol velliyaiyum, veethigalin saetraippol pasumbonnaiyum saerththuvaiththathu.
Zechariah 9:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
- Open Tamil Contemporary Version
- தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.
- Tamil Easy Reading Version
- தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது,
Zechariah 9:3 in English
- King James Version (KJV)
- And Tyrus did build herself a strong hold, and heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.
- World English Bible (WEB)
- Tyre built herself a stronghold, and heaped up silver like the dust, and fine gold like the mire of the streets.
- American Standard Version (ASV)
- And Tyre did build herself a stronghold, and heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.
- Bible in Basic English (BBE)
- And Tyre made for herself a strong place, and got together silver like dust and the best gold like the earth of the streets.
- Darby Translation (DBY)
- And Tyre hath built herself a stronghold, and hath heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.
- Webster's Bible (WBS)
- And Tyre built herself a strong hold, and amassed silver as the dust, and fine gold as the mire of the streets.
- Young's Literal Translation (YLT)
- And Tyre doth build a bulwark to herself, And doth heap silver as dust, And gold as mire of out-places.
Read in context
- 1ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கும்.
- 2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதன் எல்லைக்குள்ளாயிருக்கும்.
- 3தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
- 4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
- 5அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக்கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
Cross references
- Joshua 19:29 யோசுவா 19:29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
- Ezekiel 28:4–5 எசேக்கியேல் 28:4–5நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய். உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
- Job 27:16 யோபு 27:16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
- Ezekiel 27:33 எசேக்கியேல் 27:33உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
- 2 Samuel 24:7 2 சாமுவேல் 24:7பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
- Isaiah 23:8 ஏசாயா 23:8கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
- Job 22:24 யோபு 22:24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
- 1 Kings 10:27 1 இராஜாக்கள் 10:27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.