Enakkaga Iraiva Enakkaga Lyrics in Tamil & English
Chorus
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக
Enakkaaga iraivaa enakkaaga
Idarpada vantheer enakkaaga
Verse 1
பழிகளை சுமத்தி பரிகசித்தார் – உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் –எனக்காக இறைவா
Pazhigalai sumaththi parigasiththaar – uyir
Pariththida ennith theerppaliththaar –enakkaaga iraivaa
Verse 2
தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் – உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார் –எனக்காக இறைவா
Thaalaas siluvai sumakka vaiththaar – ummai
Maalaath thuyaraal thudikka vaiththaar –enakkaaga iraivaa
Verse 3
விழுந்தீர் சிலுவைப் பளுவோடு – மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு –எனக்காக இறைவா
Vizhuntheer siluvaip paluvodu – meendum
Ezhuntheer thuyarkalin ninaivodu –enakkaaga iraivaa
Verse 4
தாங்கிட வொண்ணாத் துயருற்றே – உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் –எனக்காக இறைவா
Thaangida vonnaath thuyarutrae – ummaith
Thaangiya annai thuyarutraal –enakkaaga iraivaa
Verse 5
மறுத்திட முடியா நிலையாலே – சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு –எனக்காக இறைவா
Maruththida mudiyaa nilaiyaalae – seemon
Varuththinaar thannai ummodu –enakkaaga iraivaa
Verse 6
நிலையாய் பதிந்தது உம் வதனம் – அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில் –எனக்காக இறைவா
Nilaiyaay pathinthathu um vathanam – anpin
Vilaiyaay maathin siru thuniyil –enakkaaga iraivaa
Verse 7
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் – அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் –எனக்காக இறைவா
Oyntheer paluvinais sumanthathanaal – antho
Saayntheer nilaththil marumuraiyum –enakkaaga iraivaa
Verse 8
விழிநீர் பெருக்கிய மகளிருக்கு – அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் –எனக்காக இறைவா
Vizhineer perukkiya magalirukku – anpu
Mozhineer nalki vazhi thodarntheer –enakkaaga iraivaa
Verse 9
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் – கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் –எனக்காக இறைவா
Moondraam muraiyaay neer vizhuntheer – kaal
Oondri nadanthidum nilai thalarntheer –enakkaaga iraivaa
Verse 10
உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் – இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர் –எனக்காக இறைவா
Udaigal kalainthida ummaith thantheer – iraththa
Madaigal thiranthida mey nontheer –enakkaaga iraivaa
Verse 11
பொங்கிய உதரம் வடிந்திடவே – உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே –எனக்காக இறைவா
Pongiya utharam vadinthidavae – ummaith
Thongidas seythaar siluvaiyilae –enakkaaga iraivaa
Verse 12
இன்னுயிர் அகன்றது உமை விட்டு – பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு –எனக்காக இறைவா
Innuyir agandrathu umai vittu – poomi
Irulil aazhnthathu oli kettu –enakkaaga iraivaa
Verse 13
துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து – அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து –எனக்காக இறைவா
Thuyarutruth thudiththaal ulam nonthu – annai
Uyiratra udalin madisumanthu –enakkaaga iraivaa
Verse 14
ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு – நீர்
அடங்கிய கல்லறை உமதன்று –எனக்காக இறைவா
Odungiya umathudal pothiyappattu – neer
Adangiya kallarai umathandru –enakkaaga iraivaa
Enakkaga Iraiva Enakkaga PPT – PowerPoint Slides
Download எனக்காக இறைவா எனக்காக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.