Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ilakkai Noekki Thotarkiraen Lyricsஇலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே

Artist to be confirmedFaithWorshipCross

Ilakkai Noekki Thotarkiraen Lyrics in Tamil & English

Chorus

இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே

இந்து தேச என் ஜனம் இரட்சிப்பின்றி மாளுதே

Ilakkai nokki thodarkiraen ilatchiyam en yesuvae

Inthu thaesa en janam ratchippindri maaluthae

Verse 1

அவரன்பை ருசித்த உனக்கு வந்ததே ஒரு அழைப்பு

ஆழி போன்ற உன் தேசம் இருளில் பெருங்கூட்டம்

ஆதி அன்பை இழந்ததென்ன? ஆத்ம பாரம் குறைந்ததென்ன?

ஆசையாய் நாம் தொடருவோம்! ஜீவ கிரீடம் சூட்டுவார்

Avaranpai rusiththa unakku vanthathae oru azhaippu

Aazhi pondra un thaesam irulil perungoottam

Aathi anpai izhanthathenna? aathma paaram kurainthathenna?

Aasaiyaay naam thodaruvom! jeeva kireedam soottuvaar

Verse 2

தூய உள்ளம் உன்னில் இன்று துங்கவன் விரும்புகின்றார்

தேவ கரங்களை நோக்கி உன் கைகளை நீட்டு

பாவ சேற்றில் விழுந்ததென்ன? பரம அழைப்பை மறந்ததென்ன?

பரிசுத்தம் நாம் தேடுவோம்! பரிசுப் பொருளை நாடுவோம்

Thooya ullam unnil indru thungavan virumbugindraar

Thaeva karangalai nokki un kaigalai neettu

Paava saetril vizhunthathenna? parama azhaippai maranthathenna?

Parisuththam naam thaeduvom! parisup porulai naaduvom

Verse 3

உன் இயேசு காட்டிய நேசம் உடலில் இரத்த வெள்ளம்

உன்னைச் சொந்தமாக்கிடவே – நிந்தை சுமந்தாரே

அன்பின் அலைகள் எங்கே உன்னில்? அழியும் நினிவே உந்தன் முன்னே

அன்பிலே நாம் வளருவோம்! ஆழத்தில் வலை வீசுவோம்

Un yesu kaattiya naesam udalil iraththa vellam

Unnais sonthamaakkidavae – ninthai sumanthaarae

Anpin alaigal engae unnil? azhiyum ninivae unthan munnae

Anpilae naam valaruvom! aazhaththil valai veesuvom

Verse 4

தேவ கோபம் வேகம் வருதே தேசத்தில் மோசம் வருமே

தினம் தேடு அவர்பாதம் மன்றாடு இரவெல்லாம்

வேண்டல் உன்னில் குறைந்ததென்ன?

வேலைப்பளுவென்றுரைப்பதென்ன?

ஒலிவ மலையில் ஏறுவோம்! ஒருமித்தே மன்றாடுவோம்

Thaeva kobam vaegam varuthae thaesaththil mosam varumae

Thinam thaedu avarpaatham mandraadu iravellaam

Vaendal unnil kurainthathenna?

Vaelaippaluvendruraippathenna?

Oliva malaiyil aeruvom! orumiththae mandraaduvom

Verse 5

இந்தப் பூவின் வேஷம் மாறும் பொன் பொருள் நிலையன்று

இன்ப இயேசு பணி ஒன்றே நிலைத்தோங்குமே என்றும்

என்ன உந்தன் பங்கு இன்று? இறைவன் பணிக்கு கைகள் நீட்டு

என்னையே நான் தருகிறேன் , உந்தன் பாதம் படைக்கிறேன்

Inthap poovin vaesham maarum pon porul nilaiyandru

Inpa yesu pani ondrae nilaiththongumae endrum

Enna unthan pangu indru? iraivan panikku kaigal neettu

Ennaiyae naan tharugiraen , unthan paatham padaikkiraen

Ilakkai Noekki Thotarkiraen PPT – PowerPoint Slides

Download இலக்கை நோக்கி தொடர்கிறேன் இலட்சியம் என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I