Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Olitheepam Ilam Negnsil Lyricsஇளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

Artist to be confirmedHoly SpiritFaith

Olitheepam Ilam Negnsil Lyrics in Tamil & English

Chorus

இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

Ilam nenjsil olitheebam aetrungal

Verse 1

ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்

ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே

திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே (×2)

திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே

Olitheebam ilam nenjsil kudiyaetrungal – athin

Olivellam ulagengum irul pokkavae

Thisaimaarum ullangal vazhi kaanavae (×2)

Thiru janamaaga ini maanthar uravaadavae

Verse 2

ஒன்றை வாஞ்சிப்போம்!

இணைந்து வாழுவோம்!

உலகை வெல்லுவோம்!

Ondrai vaanjsippom!

Inainthu vaazhuvom!

Ulagai velluvom!

Verse 3

கொடிதான காலங்கள் தெரிகின்றதே

கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்

கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே (×2)

பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே

Kodithaana kaalangal therigindrathae

Karuththodu seyalaatrum vazhi kaanuvom

Kaarmaegam paar engum padarkindrathae (×2)

Poruppindri ini vaazhnthaal athu paavamae

Verse 4

பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்

வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்

தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் (×2)

பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்

Paaliya paruvaththin siraivaasangal

Vaerodu pidungungalää veliyaetrungal

Thooyaavi thunaiyodu niraivaetrungal (×2)

Pin thunivodu virainthengum kodiyaetrungal

Verse 5

புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்

விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்

ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் (×2)

நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்

Puthuppaarvai ithayaththil vizhunthaagattum

Vin aatchi manmeethu vanthaalattum

Janam yaavum siluvaimun paninthaagattum (×2)

Nam samuthaayam puthithaagum nanavaagattum

Olitheepam Ilam Negnsil PPT – PowerPoint Slides

Download இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O