Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru Naalum Enai Lyricsஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

Artist to be confirmedThanksgivingFaith

Oru Naalum Enai Lyrics in Tamil & English

Chorus

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (×2)

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (×2)

Oru naalum enai maravaa dheivam neerae

Nandriyoadu ummai thudhikkiraen (×2)

Nandri yaesuvae ennaalum yaesuvae (×2)

Verse 1

வருடங்கள் காலங்களாய்

என்னை வழுவாமல் காத்தீரையா (×2)

உம் வல்லக்கரத்தால்

நீர் என்னைத் தாங்கினீர்

உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (×2)

Varudangal kaalangalaai

Ennai vazhuvaamal kaatheeraiyaa (×2)

Um vallakkarathaal

Neer ennai thaangineer

Um siragaalae moodi kaathitteer (×2)

Chorus

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (×2)

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Nandri yaesuvae ennaalum yaesuvae (×2)

Oru naalum enai maravaa dheivam neerae

Nandriyoadu ummai thudhikkiraen

Verse 2

வாக்குத்தத்தம் தந்தவரே

உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (×2)

யார் மறந்தாலும்

நான் மறவேனே

என்ற வாக்கெனக்கு அளித்தவரே (×2)

Vaakkuthaththam thandhavarae

Undhan vaakkil unmai ullavarae (×2)

Yaar marandhaalum

Naan maravaenae

Endra vaakkenakku alithavarae (×2)

Chorus

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (×2)

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Nandri yaesuvae ennaalum yaesuvae (×2)

Oru naalum enai maravaa dheivam neerae

Nandriyoadu ummai thudhikkiraen

Verse 3

எதிர்காலம் உம் கையிலே

எந்தன் பயம் யாவும் நீங்கியதே (×2)

நீரென் பக்கத்தில்

நான் பயப்படேனே

என் துணையாக இருக்கின்றீரே (×2)

Edhirkaalam um kaiyilae

Endhan bayam yaavum neengiyadhae (×2)

Neeren pakkathil

Naan bayappadaenae

En thunaiyaaga irukkindreerae (×2)

Chorus

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (×2)

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Nandri yaesuvae ennaalum yaesuvae (×2)

Oru naalum enai maravaa dheivam neerae

Nandriyoadu ummai thudhikkiraen

Oru Naalum Enai PPT – PowerPoint Slides

Download ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O