Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanthanai Thuthipome Lyricsதந்தானைத் துதிப்போமே திருச்

Artist to be confirmedPraiseThanksgivingCross

Thanthanai Thuthipome Lyrics in Tamil & English

Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்

சபையாரே கவி – பாடிப்பாடி

விந்தையாய் நமக்கனந்தனந்தமான

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (×2)

Thandhaanai thudhipoamae – thiru

Sabaiyaarae kavi – paadippaadi

Vindhaiyaai namakkanandhanandhamaana

Villarkariyadhoar nanmai miga miga (×2)

Verse 1

ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து

ஒய்யாரத்துச் சீயோனே

ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி

செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (×2)

Oyyaarathu seeyoanae – neeyum

meiyaaga kalikoorndhu naerndhu

Oyyaarathu seeyoanae

Aiyanaesukunin kaiya kooppi thuthi

Seiguvaiyae magizh kolluvaiyae naamum (×2)

Verse 2

கண்ணாரக் களித்தாயே – நன்மைக்

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து

கண்ணாரக் களித்தாயே

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை

இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (×2)

Kannaara kalithaayae – nanmai

Kaatchiyai kandu rusithu pusithu

Kannaara kalithaayae

Ennukkadangaadha ethanaiyoa nanmai

innumunmaer soanaa maarippoar peidhumae (×2)

Verse 3

சுத்தாங்கத்து நற்சபையே – உனை

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து

சுத்தாங்கத்து நற்சபையே

சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (×2)

Suthaangathu narsabaiyae – unai

Mutraai kollavae alaindhu thirindhu

Suthaangathu narsabaiyae

Satthu kulaindhunai sakthiyaakka thammin

Rathathai sindhiyeduthae uyir varam (×2)

Verse 4

தூரம் திரிந்த சீயோனே – உனைத்

தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி

தூரம் திரிந்த சீயோனே

ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை

அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (×2)

Dhooram thirindha seeyoanae – unai

Thookkiyeduthu karathinilaendhi

Dhooram thirindha seeyoanae

Aarangal pootti alangarithu ninnai

Atthan manavaatti yaakkinadhu ennai (×2)

Verse 5

சிங்காரக் கன்னிமாரே – உம்

அலங்காரக் கும்மி அடித்துப் படித்து

சிங்காரக் கன்னிமாரே

மங்காத உம் மணவாளன் இயேசுதனை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (×2)

Singaara kannimaarae – um

Alangaara kummi adithu padithu

Singaara kannimaarae

Mangaadha um manavaalan yaesudhanai

Vaazhthi vaazhthi aetthi panindhidum

Thanthanai Thuthipome PPT – PowerPoint Slides

Download தந்தானைத் துதிப்போமே திருச் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T