Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanamum Boomiyum Vakithiduvey Lyricsவானமும் பூமியும் வகித்திடுந்தேவே

Artist to be confirmedThanksgivingPraiseHoly Spirit

Vaanamum Boomiyum Vakithiduvey Lyrics in Tamil & English

Verse 1

வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!

வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர்,

ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை

ஈந்ததற்தாய்த் தோத்ரம்!

Vaanamum poomiyum vagiththidunthaevae!

Valamnirai aandavarae!-thaevareer,

Eenaraam emmael irangi ivvaruppai

Eenthatharthaayth thothram!

Verse 2

பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர்,

கோவத்துக்கேயுரியர்,-வறியர்

ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த

ஆண்டவரே, தோத்ரம்!

Paavamnirainthor, paaththiramatror,

Kovaththukkaeyuriyar,-variyar

Aayinar emakkivvuruppai yaliththa

Aandavarae, thothram!

Verse 3

வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை

வருடநாற்பது காத்தீர்!-அந்த

வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய

வானவரே, தோத்ரம்!

Vaana mannaavai varushith thisraelai

Varudanaarpathu kaaththeer!-antha

Vallamai emakkiv varudamungaattiya

Vaanavarae, thothram!

Verse 4

ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை

அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா!

போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்;

புண்ணியரே, தோத்ரம்!

Ainthappangondai yaayirambaerai

Amarththip poshiththeer;-aiyaa!

Pontha em pasiyum puramuracheytheer;

Punniyarae, thothram!

Verse 5

பெரிய உம்நாமம் பேருலகோங்க,

வறியவர் மிடியகல,-இவ்வீவை

அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும்

நெறியெமக் கீத்தருள்வீர்!

Periya umnaamam paerulagonga,

Variyavar midiyagala,-ivveevai

Arivudangaaththae arumaiyaay aalum

Neriyemak keeththarulveer!

Verse 6

திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்

தேவரீர் பயிர்க்காரர்,-திருவே,

ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை

அழகிய கதிர்மணியாய்!

Thiruchabaippannai thigazhpayir naangal

Thaevareer payirkkaarar,-thiruvae,

Aaviyin mazhaiyaal aakkidum, emmai

Azhagiya kathirmaniyaay!

Vaanamum Boomiyum Vakithiduvey PPT – PowerPoint Slides

Download வானமும் பூமியும் வகித்திடுந்தேவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V