1 Chronicles 12:37 in Tamil
யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
Yorthaanukku akkaraiyaana roobaniyarilum, kaaththiyarilum, manaasaeyin paathikkoththiraththaarilum, yuththambanna sagalavitha aayuthangalaiyum thariththavarkal nootrirubathinaayirambaer.
1 Chronicles 12:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர்.
- Open Tamil Contemporary Version
- யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர்.
- Tamil Easy Reading Version
- யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.
1 Chronicles 12:37 in English
- King James Version (KJV)
- And on the other side of Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, an hundred and twenty thousand.
- World English Bible (WEB)
- On the other side of the Jordan, of the Reubenites, the Gadites, and of the half-tribe of Manasseh, with all kinds of instruments of war for the battle: one hundred twenty thousand.
- American Standard Version (ASV)
- And on the other side of the Jordan, of the Reubenites, and the Gadites, and of the half-tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, a hundred and twenty thousand.
- Bible in Basic English (BBE)
- From the other side of Jordan, there were a hundred and twenty thousand of the Reubenites and the Gadites and the men of the half-tribe of Manasseh, armed with every sort of instrument of war.
- Darby Translation (DBY)
- And from the other side of the Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of weapons of war for battle, a hundred and twenty thousand.
- Webster's Bible (WBS)
- And on the other side of Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, a hundred and twenty thousand.
- Young's Literal Translation (YLT)
- And from beyond the Jordan, of the Reubenite, and of the Gadite, and of the half of the tribe of Manasseh, with all instruments of the host for battle, [are] a hundred and twenty thousand.
Read in context
- 35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
- 36ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
- 37யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
- 38தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
- 39அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்றுநாள் இருந்து, போஜனபானம் பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம் பண்ணியிருந்தார்கள்.
Cross references
- Joshua 13:7–32 யோசுவா 13:7–32ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார். மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும்ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிறபட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின் சமனான பூமி யாவையும், எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும், கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத் தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள். லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம். மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான். அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிறபட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும், சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன், யாகசா, கெதெமோத், மேபாகாத், கிரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார், பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்தசீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம். காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்: யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும், எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பே மட்டும் பெத்தொனீம்வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும், சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க்கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம். மனாசே புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான். மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிறபாசான் முழுவதும் பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.
- 1 Chronicles 5:1–10 1 நாளாகமம் 5:1–10ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது. யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று. இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய். இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால். இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான். தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும், யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும்வாசம்பண்ணினார்கள். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று. சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
- Joshua 22:1–10 யோசுவா 22:1–10அப்போழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் அழைத்து, அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக் கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச்சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான். இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து: நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான். அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள். கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.
- Joshua 14:3 யோசுவா 14:3மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.
- Deuteronomy 3:12–16 உபாகமம் 3:12–16அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சததேசமெனப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன். மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர்மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லை மட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது. மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன். மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும்,
- Numbers 32:33–42 எண்ணாகமம் 32:33–42அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான். பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர், ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா, பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள். ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம், பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பெயர்களைக் கொடுத்தார்கள். மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள். அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள். மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான். நோபாக் போய், கேனாத்தையும் அதன் கிராமங்களையும் கட்டிக்கொண்டு அதற்கு தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
Original words (Hebrew)
- side · H5676עֵבֶר ʻêber
- Jordan · H3383יַרְדֵּן Yardên
- Reubenites · H7206רְאוּבֵנִי Rᵉʼûwbênîy
- Gadites · H1425גָּדִי Gâdîy
- half · H2677חֵצִי chêtsîy
- tribe · H7626שֵׁבֶט shêbeṭ
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- instruments · H3627כְּלִי kᵉlîy
- war · H6635צָבָא tsâbâʼ
- battle · H4421מִלְחָמָה milchâmâh
- hundred · H3967מֵאָה mêʼâh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.