1 Samuel 14:45 in Tamil
ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்பட லாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணைநிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.
Janangalo savulai nokki: isravaelilae inthap periya ratchippais seytha yonaththaan kolaiseyyappada laamaa? athu koodaathu; avan thalaiyil irukkira oru mayirum tharaiyilae vizhappogirathillai endru karththarudaiya jeevanaik kondu aanaiyittus sollugirom; thaevan thunainirka avan indru kaariyaththai nadappiththaan endraarkal; appadiyae yonaththaan saagaathabadikku, janangal avanaith thappuviththaarkal.
1 Samuel 14:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்களோ சவுலை பார்த்து: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவனுடைய தலையில் இருக்கிற ஒரு முடியும் தரையிலே விழப்போகிறதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடி, மக்கள் அவனைத் தப்புவித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் மனிதர் சவுலிடம், “யோனத்தான் சாகவேண்டுமோ? அவனல்லவோ இஸ்ரயேலருக்கு இப்பெரிய விடுதலையைக் கொண்டுவந்தான். வேண்டாம்! யெகோவா இருப்பது நிச்சயமெனில் அவன் தலையிலுள்ள ஒரு மயிரும் கீழே விழக்கூடாது. ஏனெனில் அவன் இறைவனின் உதவியுடனே இதை இன்று செய்தான்” என்றார்கள். இவ்விதம் மனிதர் யோனத்தானை விடுவித்ததினால் அவன் கொல்லப்படவில்லை.
- Tamil Easy Reading Version
- ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.
1 Samuel 14:45 in English
- King James Version (KJV)
- And the people said unto Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? God forbid: [as] the LORD liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.
- World English Bible (WEB)
- The people said to Saul, “Shall Jonathan die, who has worked this great salvation in Israel? Far from it! As the LORD lives, there shall not one hair of his head fall to the ground, for he has worked with God today!” So the people rescued Jonathan, so he didn’t die.
- American Standard Version (ASV)
- And the people said unto Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? Far from it: as Jehovah liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.
- Bible in Basic English (BBE)
- And the people said to Saul, Is death to come to Jonathan, the worker of this great salvation for Israel? Let it not be so: by the living Lord, not one hair of his head is to be touched, for he has been working with God today. So the people kept Jonathan from death.
- Darby Translation (DBY)
- And the people said to Saul, Shall Jonathan die, who has wrought this great salvation in Israel? Far be it! [as] Jehovah liveth, there shall not a hair of his head fall to the ground; for he has wrought with God this day. So the people delivered Jonathan, that he died not.
- Webster's Bible (WBS)
- And the people said to Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? By no means: [as] the LORD liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.
- Young's Literal Translation (YLT)
- And the people say unto Saul, 'Doth Jonathan die who wrought this great salvation in Israel? — a profanation! Jehovah liveth, if there falleth from the hair of his head to the earth, for with God he hath wrought this day;' and the people rescue Jonathan, and he hath not died.
Read in context
- 43அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
- 44அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
- 45ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்பட லாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணைநிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.
- 46சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.
- 47இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிறராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
Cross references
- Luke 21:18 லூக்கா 21:18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
- 2 Samuel 14:11 2 சாமுவேல் 14:11பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- Acts 27:34 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
- 1 Kings 1:52 1 இராஜாக்கள் 1:52அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.
- 2 Corinthians 6:1 2 கொரிந்தியர் 6:1தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
- Matthew 10:30 மத்தேயு 10:30உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
- Acts 15:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:12அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.
- Philippians 2:12–13 பிலிப்பியர் 2:12–13ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
- Revelation 19:14 வெளிப்படுத்தின விசேஷம் 19:14பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லியவஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.
- Acts 21:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில்செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
- Isaiah 29:20–21 ஏசாயா 29:20–21கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான். ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.
- Revelation 17:14 வெளிப்படுத்தின விசேஷம் 17:14இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
Original words (Hebrew)
- people · H5971עַם ʻam
- said · H559אָמַר ʼâmar
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- Jonathan · H3129יוֹנָתָן Yôwnâthân
- die · H4191מוּת mûwth
- wrought · H6213עָשָׂה ʻâsâh
- great · H1419גָּדוֹל gâdôwl
- salvation · H3444יְשׁוּעָה yᵉshûwʻâh
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- forbid · H2486חָלִילָה châlîylâh
- liveth · H2416חַי chay
- hair · H8185שַׂעֲרָה saʻărâh
- head · H7218רֹאשׁ rôʼsh
- fall · H5307נָפַל nâphal
- ground · H776אֶרֶץ ʼerets
- wrought · H6213עָשָׂה ʻâsâh
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- day · H3117יוֹם yôwm
- people · H5971עַם ʻam
- rescued · H6299פָּדָה pâdâh
- Jonathan · H3129יוֹנָתָן Yôwnâthân
- died · H4191מוּת mûwth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.