1 Samuel 16:7 in Tamil
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
Karththar saamuvaelai nokki: nee ivanudaiya mugaththaiyum, ivanudaiya sareera valarchiyaiyum paarkkavaendaam; naan ivanaip purakkaniththaen; manushan paarkkirabadi naan paaraen; manushan mugaththaip paarppaan; karththaro iruthayaththaip paarkkiraar endraar.
1 Samuel 16:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் யெகோவா சாமுயேலிடம், “இவனுடைய தோற்றத்தையும், உயரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்து விட்டேன். ஏனெனில் மனிதர் பார்ப்பதைப் போல் யெகோவா பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்ப்பான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார்.
- Tamil Easy Reading Version
- ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.
1 Samuel 16:7 in English
- King James Version (KJV)
- But the LORD said unto Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have refused him: for [the Lord seeth] not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart.
- World English Bible (WEB)
- But the LORD said to Samuel, “Don’t look on his face, or on the height of his stature, because I have rejected him; for I don’t see as man sees. For man looks at the outward appearance, but the LORD looks at the heart.”
- American Standard Version (ASV)
- But Jehovah said unto Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have rejected him: for [Jehovah seeth] not as man seeth; for man looketh on the outward appearance, but Jehovah looketh on the heart.
- Bible in Basic English (BBE)
- But the Lord said to Samuel, Do not take note of his face or how tall he is, because I will not have him: for the Lord's view is not man's; man takes note of the outer form, but the Lord sees the heart.
- Darby Translation (DBY)
- But Jehovah said to Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have rejected him; for it is not as man seeth; for man looketh upon the outward appearance, but Jehovah looketh upon the heart.
- Webster's Bible (WBS)
- But the LORD said to Samuel, Look not on his countenance, or on the hight of his stature; because I have refused him: for [the LORD seeth] not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart.
- Young's Literal Translation (YLT)
- And Jehovah saith unto Samuel, 'Look not unto his appearance, and unto the height of his stature, for I have rejected him; for [it is] not as man seeth — for man looketh at the eyes, and Jehovah looketh at the heart.'
Read in context
- 5அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.
- 6அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.
- 7கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
- 8அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
- 9ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
Cross references
- John 7:24 யோவான் 7:24தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
- Jeremiah 17:10 எரேமியா 17:10கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
- Luke 16:15 லூக்கா 16:15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
- Isaiah 55:8–9 ஏசாயா 55:8–9என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
- 1 Peter 3:4 1 பேதுரு 3:4அழியாத அலங்கரிப்பாயிருக்கிறசாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
- Proverbs 16:2 நீதிமொழிகள் 16:2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
- Proverbs 31:30 நீதிமொழிகள் 31:30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிறஸ்திர்⟨P⟩யே புகழப்படுவாள்.
- Psalm 147:10–11 சங்கீதம் 147:10–11அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
- 1 Chronicles 28:9 1 நாளாகமம் 28:9என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
- 1 Kings 8:39 1 இராஜாக்கள் 8:39உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
- Acts 1:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
- 2 Chronicles 16:9 2 நாளாகமம் 16:9தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள்நேரிடும் என்றான்.
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- Samuel · H8050שְׁמוּאֵל Shᵉmûwʼêl
- Look · H5027נָבַט nâbaṭ
- countenance · H4758מַרְאֶה marʼeh
- height · H1364גָּבֹהַּ gâbôahh
- stature · H6967קוֹמָה qôwmâh
- refused · H3988מָאַס mâʼaç
- man · H120אָדָם ʼâdâm
- seeth · H7200רָאָה râʼâh
- man · H120אָדָם ʼâdâm
- looketh · H7200רָאָה râʼâh
- appearance · H5869עַיִן ʻayin
- looketh · H7200רָאָה râʼâh
- heart · H3824לֵבָב lêbâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.