1 Samuel 2:21 in Tamil
அப்படியே கர்த்தர் அன்னாளைக்கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
Appadiyae karththar annaalaikkadaatchiththaar; aval karppanthariththu moondru kumaararaiyum irandu kumaaraththigalaiyum petraal; saamuvael ennum pillaiyaandaan karththarudaiya sannithiyil valarnthaan.
1 Samuel 2:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே யெகோவா அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை யெகோவாவுக்கு முன்பாக வளர்ந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.
1 Samuel 2:21 in English
- King James Version (KJV)
- And the LORD visited Hannah, so that she conceived, and bare three sons and two daughters. And the child Samuel grew before the LORD.
- World English Bible (WEB)
- The LORD visited Hannah, and she conceived and bore three sons and two daughters. The child Samuel grew before the LORD.
- American Standard Version (ASV)
- And Jehovah visited Hannah, and she conceived, and bare three sons and two daughters. And the child Samuel grew before Jehovah.
- Bible in Basic English (BBE)
- And the Lord had mercy on Hannah and she gave birth to three sons and two daughters. And the young Samuel became older before the Lord.
- Darby Translation (DBY)
- So Jehovah visited Hannah, and she conceived, and bore three sons and two daughters. And the boy Samuel grew before Jehovah.
- Webster's Bible (WBS)
- And the LORD visited Hannah, so that she conceived, and bore three sons and two daughters. And the child Samuel grew before the LORD.
- Young's Literal Translation (YLT)
- When Jehovah hath looked after Hannah, then she conceiveth and beareth three sons and two daughters; and the youth Samuel groweth up with Jehovah.
Read in context
- 19அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக தன் புருஷனோடேகூடவருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.
- 20ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
- 21அப்படியே கர்த்தர் அன்னாளைக்கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
- 22ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,
- 23அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச்சொல்லக் கேட்கிறேன்.
Cross references
- Luke 2:40 லூக்கா 2:40பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
- 1 Samuel 3:19 1 சாமுவேல் 3:19சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை.
- Genesis 21:1 ஆதியாகமம் 21:1கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடிசாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
- 1 Samuel 2:26 1 சாமுவேல் 2:26சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
- Judges 13:24 நியாயாதிபதிகள் 13:24பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
- Luke 1:80 லூக்கா 1:80அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
- Luke 1:68 லூக்கா 1:68இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
- 1 Samuel 1:19–20 1 சாமுவேல் 1:19–20அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார். சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
- Luke 2:52 லூக்கா 2:52இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
Original words (Hebrew)
- And · H3588כִּי kîy
- visited · H6485פָּקַד pâqad
- Hannah · H2584חַנָּה Channâh
- conceived · H2029הָרָה hârâh
- bare · H3205יָלַד yâlad
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- sons · H1121בֵּן bên
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- daughters · H1323בַּת bath
- child · H5288נַעַר naʻar
- Samuel · H8050שְׁמוּאֵל Shᵉmûwʼêl
- grew · H1431גָּדַל gâdal
- before · H5973עִם ʻim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.