1 Samuel 20:3 in Tamil
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்குமனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.
Appozhuthu thaaveethu: ummudaiya kangalil enakkuth thayaigidaiththathu endru ummudaiya thagappan nandraay arivaar; aagaiyaal yonaththaanukkumananovu undaagaathabadikku avan ithai ariyappogaathu enpaar; maranaththirkum enakkum oru adi thooramaaththiram irukkirathu endru karththarudaiya jeevanaiyum ummudaiya jeevanaiyum kondu nichayamaays sollugiraen endru marumozhi solli aanaiyittaan.
1 Samuel 20:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது தாவீது யோனத்தானிடம், “எனக்கு உனது கண்களில் தயவு கிடைத்திருக்கிறது என்பது உனது தகப்பனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர், இது யோனத்தானுக்குத் தெரியவந்தால் அவன் மனம் வருந்துவான். அவனுக்குத் தெரியக்கூடாது என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருக்கிறார். யெகோவா இருப்பதும், நீ வாழ்வதும் நிச்சயம்போல, மரணத்துக்கும், எனக்கும் ஒரு அடி தூரம் மட்டும் இருக்கிறதென்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்து சொன்னான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் தாவீது, “உன் கண்களில் எனக்கு தயை கிடைத்தது, இதை உன் தந்தை அறிவார். அதனால், என்னிடமுள்ள நட்பினிமித்தம் நீ சஞ்சலம் அடையாதபடிக்கு இதை உன்னிடம் மறைத்தார். கர்த்தர் ஜீவித்திருக்க நீயும் ஜீவித்திருக்கிற உண்மைபடி கூறுகிறேன். நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று பதிலளித்தான்.
1 Samuel 20:3 in English
- King James Version (KJV)
- And David sware moreover, and said, Thy father certainly knoweth that I have found grace in thine eyes; and he saith, Let not Jonathan know this, lest he be grieved: but truly [as] the LORD liveth, and [as] thy soul liveth, [there is] but a step between me and death.
- World English Bible (WEB)
- David swore moreover, and said, “Your father knows well that I have found favor in your eyes; and he says, ‘Don’t let Jonathan know this, lest he be grieved;’ but truly as the LORD lives, and as your soul lives, there is but a step between me and death.”
- American Standard Version (ASV)
- And David sware moreover, and said, Thy father knoweth well that I have found favor in thine eyes; and he saith, Let not Jonathan know this, lest he be grieved: but truly as Jehovah liveth, and as thy soul liveth, there is but a step between me and death.
- Bible in Basic English (BBE)
- But David took his oath again and said, Your father sees that I am dear to you; so he says to himself, Let Jonathan have no idea of this, for it will be a grief to him; but as the Lord is living, and as your soul is living, there is only a step between me and death.
- Darby Translation (DBY)
- And David swore again and again, and said, Thy father certainly knows that I have found favour in thy sight: and he has thought, Jonathan shall not know this, lest he be grieved; but truly [as] Jehovah liveth, and [as] thy soul liveth, there is but a step between me and death.
- Webster's Bible (WBS)
- And David swore moreover, and said, Thy father certainly knoweth that I have found grace in thy eyes; and he saith, Let not Jonathan know this, lest he should be grieved: But truly [as] the LORD liveth, and [as] thy soul liveth, [there is] but a step between me and death.
- Young's Literal Translation (YLT)
- And David sweareth again, and saith, 'Thy father hath certainly known that I have found grace in thine eyes, and he saith, Let not Jonathan know this, lest he be grieved; and yet, Jehovah liveth, and thy soul liveth, but — as a step between me and death.'
Read in context
- 1தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
- 2அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
- 3அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்குமனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.
- 4அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும்; அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
- 5தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.
Cross references
- 1 Samuel 25:26 1 சாமுவேல் 25:26இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.
- 2 Kings 2:6 2 இராஜாக்கள் 2:6பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டுசொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
- Deuteronomy 6:13 உபாகமம் 6:13உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.
- 1 Samuel 27:1 1 சாமுவேல் 27:1பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.
- 2 Kings 2:4 2 இராஜாக்கள் 2:4பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
- 2 Kings 2:2 2 இராஜாக்கள் 2:2எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டுசொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
- 1 Samuel 1:26 1 சாமுவேல் 1:26அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
- 1 Samuel 17:55 1 சாமுவேல் 17:55தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- 2 Samuel 15:21 2 சாமுவேல் 15:21ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- Jeremiah 4:2 எரேமியா 4:2நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
- Hebrews 6:16 எபிரெயர் 6:16மனுஷர் தங்களிலும் பெரியவர் பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
- Psalm 116:3 சங்கீதம் 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும்சஞ்சலத்தையும் அடைந்தேன்.
Original words (Hebrew)
- David · H1732דָּוִד Dâvid
- sware · H7650שָׁבַע shâbaʻ
- said · H559אָמַר ʼâmar
- father · H1אָב ʼâb
- certainly · H3045יָדַע yâdaʻ
- knoweth · H3045יָדַע yâdaʻ
- found · H4672מָצָא mâtsâʼ
- grace · H2580חֵן chên
- eyes · H5869עַיִן ʻayin
- saith · H559אָמַר ʼâmar
- Jonathan · H3083יְהוֹנָתָן Yᵉhôwnâthân
- know · H3045יָדַע yâdaʻ
- grieved · H6087עָצַב ʻâtsab
- truly · H199אוּלָם ʼûwlâm
- liveth · H2416חַי chay
- soul · H5315נֶפֶשׁ nephesh
- liveth · H2416חַי chay
- step · H6587פֶּשַׂע pesaʻ
- death · H4194מָוֶת mâveth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.