2 Chronicles 13:21 in Tamil
அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
Abiyaa palaththupponaan; avan pathinaalu sthireegalai vivaagambanni, irubaththirandu kumaararaiyum pathinaaru kumaaraththigalaiyum petraan.
2 Chronicles 13:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் அபியா மேலும் வலிமையடைந்தான். அவன் பதினான்கு பெண்களைத் திருமணம் செய்தான். இருபத்து இரண்டு மகன்களும், பதினாறு மகள்களும் அவனுக்கு இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 மகன்களுக்கும், 16 மகள்களுக்கும் தந்தையானான்.
2 Chronicles 13:21 in English
- King James Version (KJV)
- But Abijah waxed mighty, and married fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
- World English Bible (WEB)
- But Abijah grew mighty and took for himself fourteen wives, and became the father of twenty-two sons and sixteen daughters.
- American Standard Version (ASV)
- But Abijah waxed mighty, and took unto himself fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
- Bible in Basic English (BBE)
- But Abijah became great, and had fourteen wives, and became the father of twenty-two sons and sixteen daughters.
- Darby Translation (DBY)
- But Abijah strengthened himself, and took fourteen wives, and begot twenty-two sons and sixteen daughters.
- Webster's Bible (WBS)
- But Abijah became mighty, and married fourteen wives, and begat twenty and two sons, and sixteen daughters.
- Young's Literal Translation (YLT)
- And Abijah strengtheneth himself, and taketh to him fourteen wives, and begetteth twenty and two sons, and sixteen daughters,
Read in context
- 19அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
- 20அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
- 21அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
- 22அபியாவின் மற்றக் கிரியைகளும் அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.
Cross references
- 2 Chronicles 11:21 2 நாளாகமம் 11:21ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
- Judges 8:30–31 நியாயாதிபதிகள் 8:30–31கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர். சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.
- Judges 9:5 நியாயாதிபதிகள் 9:5அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளிந்திருந்தபடியினால் அவன் தப்பினான்.
- 2 Samuel 5:12–13 2 சாமுவேல் 5:12–13கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது, அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.
- Judges 10:4 நியாயாதிபதிகள் 10:4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது. கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.