2 Chronicles 3:15 in Tamil
ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
Aalayaththirku munnaaga muppaththainthumuzha uyaramaana irandu thoongalaiyum, avaigaludaiya munaigalin maelirukkum ainthumuzha uyaramaana kumbangalaiyum undaakki,
2 Chronicles 3:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
- Open Tamil Contemporary Version
- ஆலயத்தின் முன்பகுதியில் அவன் இரண்டு தூண்களைச் செய்திருந்தான், அவை இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றும் முப்பத்தைந்து முழ நீளமாயிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஐந்துமுழ அளவுள்ள கும்பம் இருந்தது.
- Tamil Easy Reading Version
- சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான்.
2 Chronicles 3:15 in English
- King James Version (KJV)
- Also he made before the house two pillars of thirty and five cubits high, and the chapiter that [was] on the top of each of them [was] five cubits.
- World English Bible (WEB)
- Also he made before the house two pillars thirty-five cubits high, and the capital that was on the top of each of them was five cubits.
- American Standard Version (ASV)
- Also he made before the house two pillars of thirty and five cubits high, and the capital that was on the top of each of them was five cubits.
- Bible in Basic English (BBE)
- And in front of the house he made two pillars, thirty-five cubits high, with crowns on the tops of them, five cubits high.
- Darby Translation (DBY)
- And before the house he made two pillars thirty-five cubits long; and the capital that was on the top of each of them was five cubits.
- Webster's Bible (WBS)
- Also he made before the house two pillars of thirty and five cubits high, and the capital that [was] on the top of each of them [was] five cubits.
- Young's Literal Translation (YLT)
- And he maketh at the front of the house two pillars, thirty and five cubits in length, and the ornament that [is] on their heads five cubits.
Read in context
- 13இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
- 14இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
- 15ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின் மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
- 16சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.
- 17அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.
Cross references
- 1 Kings 7:15–24 1 இராஜாக்கள் 7:15–24இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது. அந்தத் தூண்களுடைய தலைப்பில்வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது. தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது. தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும் படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான். மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ளகும்பங்கள் லீலி புஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது. இரண்டு தூண்களின்மேலுமுள்ளகும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இருநூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது. அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான். தூண்களுடைய சிகரத்தில் லீலிபுஷ்பவேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது. வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது.
- Jeremiah 52:20–23 எரேமியா 52:20–23சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத் துக்கு நிறையில்லை. அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூணும் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது. அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது. தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
Original words (Hebrew)
- made · H6213עָשָׂה ʻâsâh
- before · H6440פָּנִים pânîym
- house · H1004בַּיִת bayith
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- thirty · H7970שְׁלוֹשִׁים shᵉlôwshîym
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- high · H753אֹרֶךְ ʼôrek
- chapiter · H6858צֶפֶת tsepheth
- top · H7218רֹאשׁ rôʼsh
- five · H2568חָמֵשׁ châmêsh
- cubits · H520אַמָּה ʼammâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.