2 Corinthians 9:6 in Tamil
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
Pinnum naan sollugirathennavenil, siruga vithaikkiravan siruga aruppaan, peruga vithaikkiravan peruga aruppaan.
2 Corinthians 9:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான்.
- Open Tamil Contemporary Version
- கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- Tamil Easy Reading Version
- “கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.
2 Corinthians 9:6 in English
- King James Version (KJV)
- But this [I say], He which soweth sparingly shall reap also sparingly; and he which soweth bountifully shall reap also bountifully.
- World English Bible (WEB)
- Remember this: he who sows sparingly will also reap sparingly. He who sows bountifully will also reap bountifully.
- American Standard Version (ASV)
- But this [I say], He that soweth sparingly shall reap also sparingly; and he that soweth bountifully shall reap also bountifully.
- Bible in Basic English (BBE)
- But in the Writings it says, He who puts in only a small number of seeds, will get in the same; and he who puts them in from a full hand, will have produce in full measure from them.
- Darby Translation (DBY)
- But this [is true], he that sows sparingly shall reap also sparingly; and he that sows in [the spirit of] blessing shall reap also in blessing:
- Webster's Bible (WBS)
- But this [I say] , He who soweth sparingly, shall reap also sparingly; and he who soweth bountifully, shall reap also bountifully.
- Young's Literal Translation (YLT)
- And this: He who is sowing sparingly, sparingly also shall reap; and he who is sowing in blessings, in blessings also shall reap;
Read in context
- 4மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
- 5ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானதுலோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
- 6பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
- 7அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியேகொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
- 8மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
Cross references
- Proverbs 11:24–25 நீதிமொழிகள் 11:24–25வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
- Luke 6:38 லூக்கா 6:38கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
- Proverbs 22:9 நீதிமொழிகள் 22:9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
- Proverbs 19:17 நீதிமொழிகள் 19:17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
- 2 Corinthians 9:10 2 கொரிந்தியர் 9:10விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
- Galatians 6:7–9 கலாத்தியர் 6:7–9மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
- Hebrews 6:10 எபிரெயர் 6:10ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
- Proverbs 11:18 நீதிமொழிகள் 11:18துன்மார்க்கன் விருதாவேலையைச்செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
- Ecclesiastes 11:6 பிரசங்கி 11:6காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
- Ecclesiastes 11:1 பிரசங்கி 11:1உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
- Psalm 41:1–3 சங்கீதம் 41:1–3சிறுமைப்பட்டவன்மேல்சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
- Galatians 5:16 கலாத்தியர் 5:16பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையைநிறைவேற்றாதிருப்பீர்கள்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- this · G5124τοῦτο toûto
- He · G3588ὁ ho
- soweth · G4687σπείρω speírō
- sparingly · G5340φειδομένως pheidoménōs
- reap · G2325θερίζω therízō
- also · G2532καί kaí
- sparingly · G5340φειδομένως pheidoménōs
- and · G2532καί kaí
- he · G3588ὁ ho
- soweth · G4687σπείρω speírō
- bountifully · G2129εὐλογία eulogía
- reap · G2325θερίζω therízō
- also · G2532καί kaí
- bountifully · G2129εὐλογία eulogía
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.