2 Samuel 13:18 in Tamil
அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக் கொள்வார்கள்.
Appadiyae avanidaththil saevikkiravan avalai veliyae thalli, kathavaip poottinaan; aval palavarnamaana vasthiraththai uduththikkondirunthaal; raajagumaaraththigalaagiya kannigaigal ippadikkoththa saalvaigalaith thariththuk kolvaarkal.
2 Samuel 13:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அவனிடம் வேலைசெய்கிறவன் அவளை வெளியேத் தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான ஆடையை அணிந்துகொண்டிருந்தாள்; ராஜாவின் மகள்களான கன்னிகைகள் இதைப்போல சால்வைகளை அணிந்துகொள்வார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே அவனுடைய பணியாள் அவளை வெளியேதள்ளிக் கதவைப் பூட்டினான். அப்பொழுது அரச குடும்பத்து கன்னிப்பெண்கள் அணியும் மிக அலங்காரமான அங்கியை தாமார் அணிந்திருந்தாள்.
- Tamil Easy Reading Version
- அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான். தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். அரசனின் கன்னிப் பெண்கள் (மகள்கள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது.
2 Samuel 13:18 in English
- King James Version (KJV)
- And [she had] a garment of divers colours upon her: for with such robes were the king’s daughters [that were] virgins apparelled. Then his servant brought her out, and bolted the door after her.
- World English Bible (WEB)
- She had a garment of various colors on her, for the king’s daughters who were virgins dressed in such robes. Then his servant brought her out and bolted the door after her.
- American Standard Version (ASV)
- And she had a garment of divers colors upon her; for with such robes were the king’s daughters that were virgins apparelled. Then his servant brought her out, and bolted the door after her.
- Bible in Basic English (BBE)
- Now she had on a long robe, such as in past times the king's virgin daughters were dressed in. Then the servant put her out, locking the door after her.
- Darby Translation (DBY)
- Now she had a vest of many colours upon her; for so were the king's daughters that were virgins apparelled. And his attendant brought her out, and bolted the door after her.
- Webster's Bible (WBS)
- And [she had] a garment of divers colors upon her: for with such robes were the king's daughters [that were] virgins appareled. Then his servant brought her out, and bolted the door after her.
- Young's Literal Translation (YLT)
- — and upon her [is] a long coat, for such upper robes do daughters of the king who [are] virgins put on, — and his servant taketh her out without, and hath bolted the door after her.
Read in context
- 16அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,
- 17தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.
- 18அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக் கொள்வார்கள்.
- 19அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.
- 20அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.
Cross references
- Genesis 37:3 ஆதியாகமம் 37:3இஸ்ரவேலின் முதிர்வயதிலேயோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
- Judges 5:30 நியாயாதிபதிகள் 5:30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்கு கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின்கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
- Genesis 37:32 ஆதியாகமம் 37:32பல வருணமான அந்த அங்கியைத்தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
- Psalm 45:13–14 சங்கீதம் 45:13–14ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற் சரிகையாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
- Genesis 37:23 ஆதியாகமம் 37:23யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
Original words (Hebrew)
- garment · H3801כְּתֹנֶת kᵉthôneth
- colours · H6446פַּס paç
- robes · H4598מְעִיל mᵉʻîyl
- king’s · H4428מֶלֶךְ melek
- daughters · H1323בַּת bath
- virgins · H1330בְּתוּלָה bᵉthûwlâh
- apparelled · H3847לָבַשׁ lâbash
- servant · H8334שָׁרַת shârath
- brought · H3318יָצָא yâtsâʼ
- out · H2351חוּץ chûwts
- bolted · H5274נָעַל nâʻal
- door · H1817דֶּלֶת deleth
- after · H310אַחַר ʼachar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.