2 Samuel 6:12 in Tamil
தேவனுடைய பெட்டியினிமித்தம்கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
Thaevanudaiya pettiyinimiththamkarththar obaethaethomin veettaiyum, avanukku undaana ellaavatraiyum aaseervathiththaar endru thaaveethuraajaavukku arivikkappattathu; appozhuthu thaaveethu thaevanudaiya pettiyai obaeth aethomin veettilirunthu thaaveethin nagaraththukku magizhchiyudanae konduvanthaan.
2 Samuel 6:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான்.
- Tamil Easy Reading Version
- பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான்.
2 Samuel 6:12 in English
- King James Version (KJV)
- And it was told king David, saying, The LORD hath blessed the house of Obed-edom, and all that [pertaineth] unto him, because of the ark of God. So David went and brought up the ark of God from the house of Obed-edom into the city of David with gladness.
- World English Bible (WEB)
- King David was told, “The LORD has blessed the house of Obed-Edom, and all that belongs to him, because of God’s ark.” So David went and brought up God’s ark from the house of Obed-Edom into David’s city with joy.
- American Standard Version (ASV)
- And it was told king David, saying, Jehovah hath blessed the house of Obed-edom, and all that pertaineth unto him, because of the ark of God. And David went and brought up the ark of God from the house of Obed-edom into the city of David with joy.
- Bible in Basic English (BBE)
- And they said to King David, The blessing of the Lord is on the family of Obed-edom and on all he has, because of the ark of God. And David went and took the ark of God from the house of Obed-edom into the town of David with joy.
- Darby Translation (DBY)
- And it was told king David, saying, Jehovah has blessed the house of Obed-Edom, and all that is his, because of the ark of God. And David went and brought up the ark of God from the house of Obed-Edom into the city of David with joy.
- Webster's Bible (WBS)
- And it was told king David, saying, The LORD hath blessed the house of Obed-edom, and all that [pertaineth] to him, because of the ark of God. So David went and brought up the ark of God from the house of Obed-edom into the city of David with gladness.
- Young's Literal Translation (YLT)
- And it is declared to king David, saying, 'Jehovah hath blessed the house of Obed-Edom, and all that he hath, because of the ark of God;' and David goeth and bringeth up the ark of God from the house of Obed-Edom to the city of David with joy.
Read in context
- 10அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.
- 11கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
- 12தேவனுடைய பெட்டியினிமித்தம்கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
- 13கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
- 14தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.
Cross references
- Matthew 10:42 மத்தேயு 10:42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- 1 Kings 8:1 1 இராஜாக்கள் 8:1அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொணடுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
- Psalm 24:7–10 சங்கீதம் 24:7–10வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) (தாவீதின் சங்கீதம்.)
- Psalm 68:24–27 சங்கீதம் 68:24–27தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
- Psalm 132:6–8 சங்கீதம் 132:6–8இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம். அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம். கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமதுதாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
- 1 Chronicles 15:1–3 1 நாளாகமம் 15:1–3அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான். பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான். அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
Original words (Hebrew)
- told · H5046נָגַד nâgad
- king · H4428מֶלֶךְ melek
- David · H1732דָּוִד Dâvid
- saying · H559אָמַר ʼâmar
- blessed · H1288בָרַךְ bârak
- house · H1004בַּיִת bayith
- Obed-edom · H5654עֹבֵד אֱדוֹם ʻÔbêd ʼĔdôwm
- ark · H727אָרוֹן ʼârôwn
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- David · H1732דָּוִד Dâvid
- went · H3212יָלַךְ yâlak
- up · H5927עָלָה ʻâlâh
- ark · H727אָרוֹן ʼârôwn
- God · H430אֱלֹהִים ʼĕlôhîym
- house · H1004בַּיִת bayith
- Obed-edom · H5654עֹבֵד אֱדוֹם ʻÔbêd ʼĔdôwm
- city · H5892עִיר ʻîyr
- David · H1732דָּוִד Dâvid
- gladness · H8057שִׂמְחָה simchâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.