Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 6:20 in Tamil

தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

Thaaveethu than veettaarai aaseervathikkiratharkuth thirumbumbothu, savulin kumaaraththiyaagiya meegaal thaaveethukku ethirkonduvanthu, arpamanusharil oruvan than vasthirangalaik kazhatrippodugirathubola, indru thammudaiya oozhiyakkaararudaiya pengalin kangalukku munpaagath thammudaiya vasthirangalai urinthubottiruntha isravaelin raajaa indru eththanai magimaippattirunthaar endraal.

Download verse image

2 Samuel 6:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
Open Tamil Contemporary Version
தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.
Tamil Easy Reading Version
தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.

2 Samuel 6:20 in English

King James Version (KJV)
Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to day, who uncovered himself to day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
World English Bible (WEB)
Then David returned to bless his household. Michal the daughter of Saul came out to meet David, and said, “How glorious the king of Israel was today, who uncovered himself today in the eyes of his servants’ maids, as one of the vain fellows shamelessly uncovers himself!”
American Standard Version (ASV)
Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to-day, who uncovered himself to-day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
Bible in Basic English (BBE)
Then David came back to give a blessing to his family. And Michal, Saul's daughter, came out to him and said, How full of glory was the king of Israel today, who let himself be seen uncovered by his servant-girls like a foolish person uncovering himself without shame!
Darby Translation (DBY)
And David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How honourable did the king of Israel make himself to-day, who uncovered himself to-day in the eyes of the handmaids of his servants, as one of the lewd fellows shamelessly uncovers himself!
Webster's Bible (WBS)
Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to-day, who uncovered himself to-day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
Young's Literal Translation (YLT)
And David turneth back to bless his house, and Michal daughter of Saul goeth out to meet David, and saith, 'How honourable to-day was the king of Israel, who was uncovered to-day before the eyes of the handmaids of his servants, as one of the vain ones is openly uncovered!'

Read in context

  1. 18தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,
  2. 19இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
  3. 20தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
  4. 21அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
  5. 22இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்; அப்படியே நீ சொன்ன பெண் களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
Read all of 2 Samuel 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.