Deuteronomy 3:10 in Tamil
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
Samanaana naattin ellaap pattanangalaiyum, keelaeyaath muzhuvathaiyum, salkaayi, ethraeyi ennum paasaaniliruntha ogudaiya raajyaththin pattanangalmattumulla paasaan muzhuvathaiyum pidiththom.
Deuteronomy 3:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
- Open Tamil Contemporary Version
- உயர்ந்த சமவெளியிலுள்ள எல்லா பட்டணங்களையும் கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி வரையுள்ள பாசானிலிருந்த ஓகின் ஆட்சிக்குட்பட்ட எல்லா பட்டணங்களையும் கைப்பற்றினோம்.
- Tamil Easy Reading Version
- உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயிதுவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.”
Deuteronomy 3:10 in English
- King James Version (KJV)
- All the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
- World English Bible (WEB)
- We took all the cities of the plain, and all Gilead, and all Bashan, to Salecah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
- American Standard Version (ASV)
- all the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salecah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
- Bible in Basic English (BBE)
- All the towns of the table-land and all Gilead and Bashan as far as Salecah and Edrei, towns of the kingdom of Og in Bashan.
- Darby Translation (DBY)
- all the cities of the plateau, and all Gilead, and all Bashan, as far as Salchah and Edrei, the cities of the kingdom of Og in Bashan.
- Webster's Bible (WBS)
- All the cities of the plain, and all Gilead, and all Bashan, to Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
- Young's Literal Translation (YLT)
- all the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan,
Read in context
- 8இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்துபிடித்தோம்.
- 9சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
- 10சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
- 11மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற்செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
- 12அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
Cross references
- Joshua 13:11–12 யோசுவா 13:11–12கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத் தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
- Deuteronomy 4:49 உபாகமம் 4:49எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
- Joshua 13:31 யோசுவா 13:31பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
- Joshua 12:4–5 யோசுவா 12:4–5இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி, எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான்.
- Numbers 21:33 எண்ணாகமம் 21:33பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.