Esther 2:21 in Tamil
அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும்தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.
Annaadkalil morthegaay raajaavin aramanai vaasalil udkaarnthirukkirabothu, vaasalkaakkira raajaavin irandu pirathaanigalaagiya pikthaanumthaeraesum varmam vaiththu, raajaavaagiya agaasvaeruvinmael kaiboda vagaithaedinaarkal.
Esther 2:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு வாசல் காவலாளிகள் பிக்தானாவும் தேரேசும் கடுங்கோபத்துடன், ராஜாவாகிய அகாஸ்வேருக்கு தீங்குசெய்ய வாய்ப்பைத் தேடினார்கள்.
- Open Tamil Contemporary Version
- மொர்தெகாய், அரசனுடைய வாசலில் இருக்கும் நாட்களில், வாசலைக் காவல்காக்கும் அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேருவுடன் கோபமடைந்து, அவனைக் கொலைசெய்யச் சதி செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மொர்தெகாய் அரசனது வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு அரசனது வாசல் காவல் அதிகாரிகள் அரசன் மீது கோபங்கொண்டனர். அவர்கள் அரசன் அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர்.
Esther 2:21 in English
- King James Version (KJV)
- In those days, while Mordecai sat in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those which kept the door, were wroth, and sought to lay hand on the king Ahasuerus.
- World English Bible (WEB)
- In those days, while Mordecai was sitting in the king’s gate, two of the king’s eunuchs, Bigthan and Teresh, who were doorkeepers, were angry, and sought to lay hands on the King Ahasuerus.
- American Standard Version (ASV)
- In those days, while Mordecai was sitting in the king’s gate, two of the king’s chamberlains, Bigthan and Teresh, of those that kept the threshold, were wroth, and sought to lay hands on the king Ahasuerus.
- Bible in Basic English (BBE)
- In those days, while Mordecai was seated at the king's doorway, two of the king's servants, Bigthan and Teresh, keepers of the door, being angry, were looking for a chance to make an attack on King Ahasuerus.
- Darby Translation (DBY)
- In those days, while Mordecai sat in the king's gate, two of the king's chamberlains, Bigthan and Teresh, of those which kept the threshold, were wroth, and sought to lay hand on the king Ahasuerus.
- Webster's Bible (WBS)
- In those days, while Mordecai sat in the king's gate, two of the king's chamberlains, Bigthan and Teresh, of those who kept the door, were wroth, and sought to lay hand on the king Ahasuerus.
- Young's Literal Translation (YLT)
- In those days, when Mordecai is sitting in the gate of the king, hath Bigthan been wroth, and Teresh, (two of the eunuchs of the king, the keepers of the threshold,) and they seek to put forth a hand on king Ahasuerus,
Read in context
- 19இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
- 20எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.
- 21அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும்தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.
- 22இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.
- 23அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
Cross references
- Esther 6:2 எஸ்தர் 6:2அப்பொழுது வாசற் காவலாளரில்ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.
- 1 Kings 16:9 1 இராஜாக்கள் 16:9இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிகொண்டிருக்கையில்,
- 2 Kings 12:20 2 இராஜாக்கள் 12:20யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
- 2 Kings 21:23 2 இராஜாக்கள் 21:23ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.
- Psalm 144:10 சங்கீதம் 144:10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாதபட்டயத்திற்குத்தப்புவிக்கிறவர்.
- 1 Kings 15:25–27 1 இராஜாக்கள் 15:25–27யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான். அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான். இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
- 2 Samuel 4:5–6 2 சாமுவேல் 4:5–6பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து, கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
- 2 Samuel 16:11 2 சாமுவேல் 16:11பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
- 2 Kings 9:22–24 2 இராஜாக்கள் 9:22–24யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான். அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான். யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
Original words (Hebrew)
- days · H3117יוֹם yôwm
- Mordecai · H4782מׇרְדְּכַי Mordᵉkay
- sat · H3427יָשַׁב yâshab
- king’s · H4428מֶלֶךְ melek
- gate · H8179שַׁעַר shaʻar
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- king’s · H4428מֶלֶךְ melek
- chamberlains · H5631סָרִיס çârîyç
- Bigthan · H904בִּגְתָן Bigthân
- Teresh · H8657תֶּרֶשׁ Teresh
- kept · H8104שָׁמַר shâmar
- door · H5592סַף çaph
- wroth · H7107קָצַף qâtsaph
- sought · H1245בָּקַשׁ bâqash
- lay · H7971שָׁלַח shâlach
- hand · H3027יָד yâd
- king · H4428מֶלֶךְ melek
- Ahasuerus · H325אֲחַשְׁוֵרוֹשׁ ʼĂchashvêrôwsh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.