Exodus 12:16 in Tamil
முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத்தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
Muthalaam naalil parisuththa sabaigooduthalum, aezhaam naalilum parisuththa sabaigooduthalum irukkavaendum; avaigalil oru vaelaiyum seyyappadalaagaathu; avaravar saappidugiratharkuththaevaiyaanathumaaththiram ungalaal seyyappadalaam.
Exodus 12:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம்.
- Open Tamil Contemporary Version
- முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம்.
- Tamil Easy Reading Version
- விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும்.
Exodus 12:16 in English
- King James Version (KJV)
- And in the first day [there shall be] an holy convocation, and in the seventh day there shall be an holy convocation to you; no manner of work shall be done in them, save [that] which every man must eat, that only may be done of you.
- World English Bible (WEB)
- In the first day there shall be to you a holy convocation, and in the seventh day a holy convocation; no kind of work shall be done in them, except that which every man must eat, only that may be done by you.
- American Standard Version (ASV)
- And in the first day there shall be to you a holy convocation, and in the seventh day a holy convocation; no manner of work shall be done in them, save that which every man must eat, that only may be done by you.
- Bible in Basic English (BBE)
- And on the first day there is to be a holy meeting and on the seventh day a holy meeting; no sort of work may be done on those days but only to make ready what is necessary for everyone's food.
- Darby Translation (DBY)
- And on the first day ye shall have a holy convocation, and on the seventh day a holy convocation: no manner of work shall be done on them, save what is eaten by every person — that only shall be done by you.
- Webster's Bible (WBS)
- And in the first day [there shall be] a holy convocation, and in the seventh day there shall be a holy convocation to you: no manner of work shall be done in them, save [that] which every man must eat, that only may be done by you.
- Young's Literal Translation (YLT)
- 'And in the first day [is] a holy convocation, and in the seventh day ye have a holy convocation; any work is not done in them, only that which is eaten by any person — it alone is done by you,
Read in context
- 14அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
- 15புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
- 16முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத்தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
- 17புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
- 18முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
Cross references
- Numbers 28:18 எண்ணாகமம் 28:18முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
- Leviticus 23:7–8 லேவியராகமம் 23:7–8முதலாம்நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
- Exodus 16:23 யாத்திராகமம் 16:23அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
- Numbers 28:25 எண்ணாகமம் 28:25ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
- Jeremiah 17:21–22 எரேமியா 17:21–22நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும். ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Numbers 29:1 எண்ணாகமம் 29:1ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
- Exodus 35:2–3 யாத்திராகமம் 35:2–3நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன். ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக்கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
- Leviticus 23:27 லேவியராகமம் 23:27அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
- Numbers 29:12 எண்ணாகமம் 29:12ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
- Leviticus 23:21 லேவியராகமம் 23:21அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
- Exodus 20:10 யாத்திராகமம் 20:10ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
- Exodus 16:29 யாத்திராகமம் 16:29பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்குவேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Original words (Hebrew)
- first · H7223רִאשׁוֹן riʼshôwn
- day · H3117יוֹם yôwm
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- convocation · H4744מִקְרָא miqrâʼ
- seventh · H7637שְׁבִיעִי shᵉbîyʻîy
- day · H3117יוֹם yôwm
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- convocation · H4744מִקְרָא miqrâʼ
- work · H4399מְלָאכָה mᵉlâʼkâh
- done · H6213עָשָׂה ʻâsâh
- save · H389אַךְ ʼak
- man · H5315נֶפֶשׁ nephesh
- eat · H398אָכַל ʼâkal
- done · H6213עָשָׂה ʻâsâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.