Ezekiel 24:4 in Tamil
சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
Sagala nalla kandangalaana pinnanthodaigalum munnanthodaigalumaagiya kandangalais saerththu athilae podu; nalla elumbugalaal athai nirappu.
Ezekiel 24:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்லா நல்ல இறைச்சி துண்டுகளான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய துண்டுகளைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
- Open Tamil Contemporary Version
- இறைச்சித் துண்டுகளையும் காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு. நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.
- Tamil Easy Reading Version
- அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு. தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு, நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
Ezekiel 24:4 in English
- King James Version (KJV)
- Gather the pieces thereof into it, [even] every good piece, the thigh, and the shoulder; fill [it] with the choice bones.
- World English Bible (WEB)
- Gather its pieces into it, even every good piece: the thigh and the shoulder. Fill it with the choice bones.
- American Standard Version (ASV)
- gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
- Bible in Basic English (BBE)
- And get the bits together, the fat tail, every good part, the leg and the top part of it: make it full of the best bones.
- Darby Translation (DBY)
- Gather the pieces thereof into it, every good piece, the thigh and the shoulder; fill [it] with the choice bones:
- Webster's Bible (WBS)
- Gather its pieces into it, [even] every good piece, the thigh, and the shoulder; fill [it] with the choice bones.
- Young's Literal Translation (YLT)
- To gather its pieces unto it, every good piece, Thigh and shoulder, the choice of the bones to fill in.
Read in context
- 2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.
- 3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.
- 4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
- 5ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
- 6இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டு போ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
Cross references
- Micah 3:2–3 மீகா 3:2–3ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.
- Matthew 7:2 மத்தேயு 7:2ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
- Ezekiel 22:18–22 எசேக்கியேல் 22:18–22மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள். ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன். வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன். நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.