Ezekiel 24:6 in Tamil
இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டு போ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
Itharkaagak karththaraagiya aandavar sollugirathu ennavendraal: nurai ottikkondirukkirathum nurai neengaathathumaagiya kopparai ennappatta iraththanjsinthiya nagaraththukku aiyo! athil irukkirathaik kandangandamaaga eduththukkondu po; athinpaeril seettuppodalaagaathu.
Ezekiel 24:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதற்காகக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, அதில் இருக்கிறதைக் துண்டுதுண்டாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடகூடாது.
- Open Tamil Contemporary Version
- ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: “ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’ இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக அவை வருகின்ற ஒழுங்குமுறையில் வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.
- Tamil Easy Reading Version
- “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இது எருசலேமிற்குக் கேடாகும். கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும். எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது. அத்துரு நீக்க முடியாதது! அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை, எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்! அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
Ezekiel 24:6 in English
- King James Version (KJV)
- Wherefore thus saith the Lord GOD; Woe to the bloody city, to the pot whose scum [is] therein, and whose scum is not gone out of it! bring it out piece by piece; let no lot fall upon it.
- World English Bible (WEB)
- “‘Therefore the Lord GOD says: “Woe to the bloody city, to the cauldron whose rust is in it, and whose rust hasn’t gone out of it! Take out of it piece after piece without casting lots for it.
- American Standard Version (ASV)
- Wherefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city, to the caldron whose rust is therein, and whose rust is not gone out of it! take out of it piece after piece; No lot is fallen upon it.
- Bible in Basic English (BBE)
- For this is what the Lord has said: A curse is on the town of blood, the cooking-pot which is unclean inside, which has never been made clean! take out its bits; its fate is still to come on it.
- Darby Translation (DBY)
- Therefore thus saith the Lord Jehovah: Woe to the bloody city, to the pot whose rust is therein, and whose rust is not gone out of it! Bring it out piece by piece; let no lot fall upon it:
- Webster's Bible (WBS)
- Wherefore thus saith the Lord GOD; Woe to the bloody city, to the pot whose scum [is] therein, and whose scum is not gone out of it! bring it out piece by piece; let no lot fall upon it.
- Young's Literal Translation (YLT)
- Therefore, thus said the Lord Jehovah: Woe [to] the city of blood, A pot whose scum [is] in it, And its scum hath not come out of it, By piece of it, by piece of it bring it out, Not fallen on it hath a lot.
Read in context
- 4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
- 5ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
- 6இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டு போ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.
- 7அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
- 8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
Cross references
- Ezekiel 22:2 எசேக்கியேல் 22:2இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காடமனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
- Nahum 3:1 நாகூம் 3:1இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
- 2 Kings 24:4 2 இராஜாக்கள் 24:4அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
- Obadiah 1:11 ஒபதியா 1:11நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
- Micah 7:2 மீகா 7:2தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
- Ezekiel 22:27 எசேக்கியேல் 22:27அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள்; ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
- Nahum 3:10 நாகூம் 3:10ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும்மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
- Jonah 1:7 யோனா 1:7அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
- Ezekiel 11:11 எசேக்கியேல் 11:11இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை; நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
- Ezekiel 22:6–9 எசேக்கியேல் 22:6–9இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள். உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள். நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைபண்ணி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம்பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.
- Ezekiel 11:6–9 எசேக்கியேல் 11:6–9இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன்என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன்என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
- Ezekiel 24:9 எசேக்கியேல் 24:9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.
Original words (Hebrew)
- saith · H559אָמַר ʼâmar
- Lord · H136אֲדֹנָי ʼĂdônây
- Woe · H188אוֹי ʼôwy
- bloody · H1818דָּם dâm
- city · H5892עִיר ʻîyr
- pot · H5518סִיר çîyr
- scum · H2457חֶלְאָה chelʼâh
- scum · H2457חֶלְאָה chelʼâh
- out · H3318יָצָא yâtsâʼ
- out · H3318יָצָא yâtsâʼ
- piece · H5409נֵתַח nêthach
- piece · H5409נֵתַח nêthach
- lot · H1486גּוֹרָל gôwrâl
- fall · H5307נָפַל nâphal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.