Ezekiel 27:34 in Tamil
நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்து போயின என்பார்கள்.
Nee samuththirath thiraigalinaalae aazhangalil udaikkappattabothu, un thozhil thuraiyum un naduvilulla koottam anaiththum azhinthu poyina enpaarkal.
Ezekiel 27:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில் கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய். உன் பொருட்களும், உனது கூட்டமும் உன்னோடு அமிழ்ந்து போயின!
- Tamil Easy Reading Version
- ஆனால் இப்பொழுது கடல் அலைகளால் ஆழங்களில் உடைக்கப்பட்டாய். நீ விற்ற அனைத்துப் பொருட்களும் உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!
Ezekiel 27:34 in English
- King James Version (KJV)
- In the time [when] thou shalt be broken by the seas in the depths of the waters thy merchandise and all thy company in the midst of thee shall fall.
- World English Bible (WEB)
- In the time that you were broken by the seas, in the depths of the waters, your merchandise and all your company fell within you.
- American Standard Version (ASV)
- In the time that thou wast broken by the seas in the depths of the waters, thy merchandise and all thy company did fall in the midst of thee.
- Bible in Basic English (BBE)
- Now that you are broken by the seas in the deep waters, your goods and all your people will go down with you.
- Darby Translation (DBY)
- In the time [when] thou art broken by the seas, in the depths of the waters, thy merchandise and all thine assemblage in the midst of thee have fallen.
- Webster's Bible (WBS)
- In the time [when] thou shalt be broken by the seas in the depths of the waters, thy merchandise and all thy company in the midst of thee shall fall.
- Young's Literal Translation (YLT)
- The time of [thy] being broken by the seas in the depths of the waters, Thy merchandise and all thy assembly in thy midst have fallen.
Read in context
- 32அவர்கள் உனக்காகத் தங்கள் துக்கத்திலே ஓலமிட்டு, உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: சமுத்திரத்தின் நடுவிலே அமிந்துபோன தீருவுக்குச் சமான நகரம் உண்டோ?
- 33உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.
- 34நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்து போயின என்பார்கள்.
- 35தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள்.
- 36சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.
Cross references
- Zechariah 9:3–4 சகரியா 9:3–4தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
- Ezekiel 27:26–27 எசேக்கியேல் 27:26–27தண்டுவலிக்கிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது. நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும், உன் மாலுமிகளும், உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லாயுத்தவீரரும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
- Ezekiel 26:19–21 எசேக்கியேல் 26:19–21கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய்நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும், பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடேநான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகால முதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச் செய்வேன். உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
- Ezekiel 26:12–15 எசேக்கியேல் 26:12–15அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள். உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும் போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.