Genesis 2:23 in Tamil
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Appozhuthu aathaam: ival en elumbil elumbum, en maamsaththil maamsamumaay irukkiraal; ival manushanil edukkappattabadiyinaal manushi ennappaduvaal endraan.
Genesis 2:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மனிதன் சொன்னான்: “இவள் என் எலும்பின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.”
- Tamil Easy Reading Version
- அப்பொழுது அவன், “இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி; அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை. அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது. அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள். அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.
Genesis 2:23 in English
- King James Version (KJV)
- And Adam said, This [is] now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
- World English Bible (WEB)
- The man said, “This is now bone of my bones, and flesh of my flesh. She will be called ‘woman,’ because she was taken out of Man.”
- American Standard Version (ASV)
- And the man said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
- Bible in Basic English (BBE)
- And the man said, This is now bone of my bone and flesh of my flesh: let her name be Woman because she was taken out of Man.
- Darby Translation (DBY)
- And Man said, This time it is bone of my bones and flesh of my flesh: this shall be called Woman, because this was taken out of a man.
- Webster's Bible (WBS)
- And Adam said, This [is] now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of man.
- Young's Literal Translation (YLT)
- and the man saith, 'This [is] the [proper] step! bone of my bone, and flesh of my flesh!' for this it is called Woman, for from a man hath this been taken;
Read in context
- 21அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
- 22தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
- 23அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
- 24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
- 25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Cross references
- Ephesians 5:28–30 எபேசியர் 5:28–30அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
- 1 Corinthians 11:8–9 1 கொரிந்தியர் 11:8–9புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்துதோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச்சிருஷ்டிக்கப்பட்டவள்.
- 2 Samuel 5:1 2 சாமுவேல் 5:1அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
- Genesis 29:14 ஆதியாகமம் 29:14அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம் வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
- Judges 9:2 நியாயாதிபதிகள் 9:2யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப் பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
- 2 Samuel 19:13 2 சாமுவேல் 19:13நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
Original words (Hebrew)
- Adam · H120אָדָם ʼâdâm
- said · H559אָמַר ʼâmar
- This · H2063זֹאת zôʼth
- now · H6471פַּעַם paʻam
- bone · H6106עֶצֶם ʻetsem
- bones · H6106עֶצֶם ʻetsem
- flesh · H1320בָּשָׂר bâsâr
- flesh · H1320בָּשָׂר bâsâr
- she · H2063זֹאת zôʼth
- called · H7121קָרָא qârâʼ
- Woman · H802אִשָּׁה ʼishshâh
- she · H2063זֹאת zôʼth
- taken · H3947לָקַח lâqach
- Man · H376אִישׁ ʼîysh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.