Genesis 20:2 in Tamil
அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
Angae aabiragaam than manaiviyaagiya saaraalaith than sagothari endru sonnathinaalae, kaeraarin raajaavaagiya abimelaekku aal anuppis saaraalai azhaippiththaan.
Genesis 20:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் “தன் சகோதரி” என்று சொன்னதால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை வரவழைத்தான்.
- Open Tamil Contemporary Version
- ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளைத், “தன் சகோதரி” என்று சொல்லியிருந்தான். அப்பொழுது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன் ஆட்களை அனுப்பி, சாராளை எடுத்துக்கொண்டான்.
- Tamil Easy Reading Version
- அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்குக் கேராரின் அரசன். அவன் சாராளை மிகவும் விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டு வருமாறு சொன்னான்.
Genesis 20:2 in English
- King James Version (KJV)
- And Abraham said of Sarah his wife, She [is] my sister: and Abimelech king of Gerar sent, and took Sarah.
- World English Bible (WEB)
- Abraham said about Sarah his wife, “She is my sister.” Abimelech king of Gerar sent, and took Sarah.
- American Standard Version (ASV)
- And Abraham said of Sarah his wife, She is my sister: and Abimelech king of Gerar sent, and took Sarah.
- Bible in Basic English (BBE)
- And Abraham said of Sarah, his wife, She is my sister: and Abimelech, king of Gerar, sent and took Sarah.
- Darby Translation (DBY)
- And Abraham said of Sarah his wife, She is my sister. And Abimelech the king of Gerar sent and took Sarah.
- Webster's Bible (WBS)
- And Abraham said of Sarah his wife, she is my sister: And Abimelech king of Gerar sent and took Sarah.
- Young's Literal Translation (YLT)
- and Abraham saith concerning Sarah his wife, 'She is my sister;' and Abimelech king of Gerar sendeth and taketh Sarah.
Read in context
- 1ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
- 2அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
- 3தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
- 4அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
Cross references
- Genesis 12:15 ஆதியாகமம் 12:15பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
- Genesis 26:7 ஆதியாகமம் 26:7அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்றுசொல்லப் பயந்தான்.
- Genesis 12:11–13 ஆதியாகமம் 12:11–13அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
- 2 Chronicles 19:2 2 நாளாகமம் 19:2அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
- Genesis 26:16 ஆதியாகமம் 26:16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
- Ecclesiastes 7:20 பிரசங்கி 7:20ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
- Colossians 3:9 கொலோசெயர் 3:9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
- Proverbs 24:16 நீதிமொழிகள் 24:16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
- Galatians 2:11–12 கலாத்தியர் 2:11–12மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
- Genesis 26:1 ஆதியாகமம் 26:1ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
- 2 Chronicles 32:31 2 நாளாகமம் 32:31ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
- Ephesians 4:25 எபேசியர் 4:25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனேமெய்யைப் பேசக்கடவன்.
Original words (Hebrew)
- Abraham · H85אַבְרָהָם ʼAbrâhâm
- said · H559אָמַר ʼâmar
- of · H413אֵל ʼêl
- Sarah · H8283שָׂרָה Sârâh
- wife · H802אִשָּׁה ʼishshâh
- sister · H269אָחוֹת ʼâchôwth
- Abimelech · H40אֲבִימֶלֶךְ ʼĂbîymelek
- king · H4428מֶלֶךְ melek
- Gerar · H1642גְּרָר Gᵉrâr
- sent · H7971שָׁלַח shâlach
- took · H3947לָקַח lâqach
- Sarah · H8283שָׂרָה Sârâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.