Genesis 49:3 in Tamil
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Roobanae, nee en saeshdabuththiran; nee en saththuvamum, en mutharpelanumaanavan; nee maenmaiyil pirathaanamum vallamaiyil visaeshamumaanavan.
Genesis 49:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
- Open Tamil Contemporary Version
- “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
- Tamil Easy Reading Version
- “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. நீயே வல்லமையும் மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.
Genesis 49:3 in English
- King James Version (KJV)
- Reuben, thou [art] my firstborn, my might, and the beginning of my strength, the excellency of dignity, and the excellency of power:
- World English Bible (WEB)
- “Reuben, you are my firstborn, my might, and the beginning of my strength, excelling in dignity, and excelling in power.
- American Standard Version (ASV)
- Reuben, thou art my first-born, my might, and the beginning of my strength; The pre-eminence of dignity, and the pre-eminence of power.
- Bible in Basic English (BBE)
- Reuben, you are my oldest son, the first-fruit of my strength, first in pride and first in power:
- Darby Translation (DBY)
- Reuben, thou art my firstborn, My might, and the firstfruits of my vigour: Excellency of dignity, and excellency of strength.
- Webster's Bible (WBS)
- Reuben, thou [art] my first-born, my might, and the beginning of my strength, the excellence of dignity, and the excellence of power:
- Young's Literal Translation (YLT)
- Reuben! my first-born thou, My power, and beginning of my strength, The abundance of exaltation, And the abundance of strength;
Read in context
- 1யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
- 2யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
- 3ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
- 4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
- 5சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
Cross references
- Psalm 78:51 சங்கீதம் 78:51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;
- Deuteronomy 21:17 உபாகமம் 21:17வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடையமுதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
- Genesis 29:32 ஆதியாகமம் 29:32லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
- Psalm 105:36 சங்கீதம் 105:36அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
- 1 Chronicles 2:1 1 நாளாகமம் 2:1இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
- 1 Chronicles 5:1 1 நாளாகமம் 5:1ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
- 1 Chronicles 5:3 1 நாளாகமம் 5:3இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
- Genesis 48:18 ஆதியாகமம் 48:18என் தகப்பனே, அப்படியல்ல, இவன் முத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
- Numbers 1:20 எண்ணாகமம் 1:20இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
- Genesis 46:8 ஆதியாகமம் 46:8எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடையமூத்தகுமாரனான ரூபன்.
- Numbers 26:5 எண்ணாகமம் 26:5ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல் லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.