Hosea 10:10 in Tamil
நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன், அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
Naan avarkalaith thandikka virumbugiraen, avarkal seytha iranduvitha paavangalinimiththam kattappadumbothu, janangal avarkalukku virothamaayk kooduvaarkal.
Hosea 10:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினாலே கட்டப்படும்போது, மக்கள் அவர்களுக்கு விரோதமாகக் கூடுவார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென, பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
- Tamil Easy Reading Version
- நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.
Hosea 10:10 in English
- King James Version (KJV)
- [It is] in my desire that I should chastise them; and the people shall be gathered against them, when they shall bind themselves in their two furrows.
- World English Bible (WEB)
- When it is my desire, I will chastise them; and the nations will be gathered against them when they are bound to their two transgressions.
- American Standard Version (ASV)
- When it is my desire, I will chastise them; and the peoples shall be gathered against them, when they are bound to their two transgressions.
- Bible in Basic English (BBE)
- I will come and give them punishment; and the peoples will come together against them when I give them the reward of their two sins.
- Darby Translation (DBY)
- At my pleasure will I chastise them; and the peoples shall be assembled against them, when they are bound for their two iniquities.
- Webster's Bible (WBS)
- [It is] in my desire that I should chastise them; and the people shall be gathered against them, when they shall bind themselves in their two furrows.
- Young's Literal Translation (YLT)
- When I desire, then I do bind them, And gathered against them have peoples, When they bind themselves to their two iniquities.
Read in context
- 8இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
- 9இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள் முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
- 10நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன், அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
- 11எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
- 12நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
Cross references
- Ezekiel 5:13 எசேக்கியேல் 5:13இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.
- Hosea 4:9 ஓசியா 4:9ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
- Jeremiah 16:16 எரேமியா 16:16இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லாமலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
- Jeremiah 15:6 எரேமியா 15:6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 23:9 எசேக்கியேல் 23:9ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
- Micah 4:10–13 மீகா 4:10–13சீயோன் குமாரத்தியே, பிரசவஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டுவேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கி மீட்பார். சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.
- Hosea 8:10 ஓசியா 8:10அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.
- Deuteronomy 28:63 உபாகமம் 28:63கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
- Hosea 8:1 ஓசியா 8:1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
- Jeremiah 21:4 எரேமியா 21:4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிகைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,
- Matthew 22:7 மத்தேயு 22:7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
- Ezekiel 16:42 எசேக்கியேல் 16:42இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.