Hosea 7:16 in Tamil
திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.
Thirumbugiraarkal, aanaalum unnathamaanavaridaththirku alla; mosambokkugira villaippolirukkiraarkal; avarkaludaiya athibathigal thangal naavinudaiya ukkiraththinimiththam pattayaththaal vizhuvaarkal; ithuvae egipthu thaesaththinimiththam avarkalukku varum ninthai.
Hosea 7:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.
- Open Tamil Contemporary Version
- நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள். அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள். பிறகு எகிப்து ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”
Hosea 7:16 in English
- King James Version (KJV)
- They return, [but] not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this [shall be] their derision in the land of Egypt.
- World English Bible (WEB)
- They return, but not to the Most High. They are like a faulty bow. Their princes will fall by the sword for the rage of their tongue. This will be their derision in the land of Egypt.
- American Standard Version (ASV)
- They return, but not to [him that is] on high; they are like a deceitful bow; their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
- Bible in Basic English (BBE)
- They have gone to what is of no value; they are like a false bow; their captains will come to destruction by the sword, and their ruler by my wrath; for this, the land of Egypt will make sport of them.
- Darby Translation (DBY)
- They return, [but] not to the [Most] High: they are like a deceitful bow. Their princes shall fall by the sword for the rage of their tongue: this shall be their derision in the land of Egypt.
- Webster's Bible (WBS)
- They return, [but] not to the most High: they are like a deceitful bow: their princes shall fall by the sword for the rage of their tongue: this [shall be] their derision in the land of Egypt.
- Young's Literal Translation (YLT)
- They turn back — not to the Most High, They have been as a deceitful bow, Fall by sword do their princes, From the insolence of their tongue, This [is] their derision in the land of Egypt!
Read in context
- 14அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத் துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
- 15நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.
- 16திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.
Cross references
- Psalm 78:57 சங்கீதம் 78:57தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
- Hosea 9:3 ஓசியா 9:3அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
- Psalm 73:9 சங்கீதம் 73:9தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
- Ezekiel 23:32 எசேக்கியேல் 23:32கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
- Psalm 12:4 சங்கீதம் 12:4அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
- Hosea 9:6 ஓசியா 9:6இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத்தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச்சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
- Matthew 12:36 மத்தேயு 12:36மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- Hosea 8:13–14 ஓசியா 8:13–14எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள். இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின வரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப்பட்சிக்கும்.
- 2 Peter 2:8 2 பேதுரு 2:8நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
- Hosea 11:7 ஓசியா 11:7என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
- Luke 11:24–26 லூக்கா 11:24–26அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கிஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.
- Revelation 13:5 வெளிப்படுத்தின விசேஷம் 13:5பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
Original words (Hebrew)
- return · H7725שׁוּב shûwb
- High · H5920עַל ʻal
- deceitful · H7423רְמִיָּה rᵉmîyâh
- bow · H7198קֶשֶׁת qesheth
- princes · H8269שַׂר sar
- fall · H5307נָפַל nâphal
- sword · H2719חֶרֶב chereb
- rage · H2195זַעַם zaʻam
- tongue · H3956לָשׁוֹן lâshôwn
- this · H2097זוֹ zôw
- derision · H3933לַעַג laʻag
- land · H776אֶרֶץ ʼerets
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.