Jeremiah 50:21 in Tamil
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Merathaayeem thaesaththukku virothamaagavum paegodu kudigalukku virothamaagavum nee poy, avarkalaith thuraththi, yaavaiyum paazhaakkis sangaarambanni, naan unakkuk kattalaiyittabadiyellaam sey endru karththar sollugiraar.
Jeremiah 50:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.
- Open Tamil Contemporary Version
- மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு! பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு! அவர்களைத் தாக்கு! அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி! நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.
Jeremiah 50:21 in English
- King James Version (KJV)
- Go up against the land of Merathaim, [even] against it, and against the inhabitants of Pekod: waste and utterly destroy after them, saith the LORD, and do according to all that I have commanded thee.
- World English Bible (WEB)
- “Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod. Kill and utterly destroy after them,” says the LORD, “and do according to all that I have commanded you.
- American Standard Version (ASV)
- Go up against the land of Merathaim, even against it, and against the inhabitants of Pekod: slay and utterly destroy after them, saith Jehovah, and do according to all that I have commanded thee.
- Bible in Basic English (BBE)
- Go up against the land of Merathaim, even against it, and against the people of Pekod; put them to death and send destruction after them, says the Lord, and do everything I have given you orders to do.
- Darby Translation (DBY)
- Go up against the land of double rebellion, against it, and against the inhabitants of visitation; waste and utterly destroy after them, saith Jehovah, and do according to all that I have commanded thee.
- Webster's Bible (WBS)
- Go up against the land of Merathaim, [even] against it, and against the inhabitants of Pekod: waste and utterly destroy after them, saith the LORD, and do according to all that I have commanded thee.
- Young's Literal Translation (YLT)
- Against the land of Merathaim: Go up against it, and unto the inhabitants of Pekod, Waste and devote their posterity, An affirmation of Jehovah, And do according to all that I have commanded thee.
Read in context
- 19இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
- 20அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 21மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 22தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
- 23சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!
Cross references
- Ezekiel 23:23 எசேக்கியேல் 23:23செளந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன்.
- Isaiah 48:14 ஏசாயா 48:14நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?
- 1 Samuel 15:3 1 சாமுவேல் 15:3இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
- 2 Samuel 16:11 2 சாமுவேல் 16:11பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
- Jeremiah 50:3 எரேமியா 50:3அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய் விடும்.
- Jeremiah 50:9 எரேமியா 50:9இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
- Jeremiah 50:15 எரேமியா 50:15அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
- Jeremiah 48:10 எரேமியா 48:10கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
- Jeremiah 34:22 எரேமியா 34:22இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்என்றார்.
- Isaiah 44:28 ஏசாயா 44:28கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
- 2 Kings 18:25 2 இராஜாக்கள் 18:25இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.
- Isaiah 10:6 ஏசாயா 10:6அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.