Jeremiah 51:34 in Tamil
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
Paabilon raajaavaagiya naebugaathnaechaar ennaip patchiththaan, ennaik kalangadiththaan, ennai verum paaththiramaaga vaiththupponaan; valusarppambola ennai vizhungi, en suvaiyulla pathaarththangalaal than vayitrai nirappinaan, ennaith thuraththivittaan.
Jeremiah 51:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
- Open Tamil Contemporary Version
- பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான். எங்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்கி, எங்களை வெறுமையான ஜாடியாக்கி விட்டான். இராட்சத பாம்பைப்போல எங்களை விழுங்கி, எங்கள் சுவையான உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டான்.
- Tamil Easy Reading Version
- சீயோன் ஜனங்கள் இவ்வாறு கூறுவார்கள், “பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் கடந்த காலத்தில் எங்களை அழித்தான். கடந்த காலத்தில் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்கினான். கடந்த காலத்தில் அவன் எங்கள் ஜனங்களைக் கொண்டுப் போனான். நாங்கள் காலியான ஜாடியைப் போன்றிருந்தோம். எங்களிடமிருந்த சிறந்தவற்றை அவன் எடுத்தான். அவன் பெரிய ராட்சதனைப்போன்று வயிறு நிறையும்வரை தின்றுக்கொண்டிருந்தான். எங்களிடமுள்ள சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு எங்களை எறிந்துவிட்டான்.
Jeremiah 51:34 in English
- King James Version (KJV)
- Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out.
- World English Bible (WEB)
- “Nebuchadnezzar the king of Babylon has devoured me. He has crushed me. He has made me an empty vessel. He has, like a monster, swallowed me up. He has filled his mouth with my delicacies. He has cast me out.
- American Standard Version (ASV)
- Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath, like a monster, swallowed me up, he hath filled his maw with my delicacies; he hath cast me out.
- Bible in Basic English (BBE)
- Nebuchadrezzar, king of Babylon, has made a meal of me, violently crushing me, he has made me a vessel with nothing in it, he has taken me in his mouth like a dragon, he has made his stomach full with my delicate flesh, crushing me with his teeth.
- Darby Translation (DBY)
- Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel; he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out.
- Webster's Bible (WBS)
- Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out.
- Young's Literal Translation (YLT)
- Devoured us, crushed us, hath Nebuchadrezzar king of Babylon, He hath set us [as] an empty vessel, He hath swallowed us as a dragon, He hath filled his belly with my dainties, He hath driven us away.
Read in context
- 32அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
- 33பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப் போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- 34பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
- 35எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன் மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.
- 36ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும் பண்ணுவேன்.
Cross references
- Jeremiah 50:17 எரேமியா 50:17இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
- Jeremiah 51:44 எரேமியா 51:44நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்குஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.
- Matthew 23:13 மத்தேயு 23:13மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.
- Isaiah 24:1–3 ஏசாயா 24:1–3இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார். அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும், வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும். தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
- Job 20:15 யோபு 20:15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
- Amos 8:4 ஆமோஸ் 8:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி:
- Lamentations 2:16 புலம்பல் 2:16உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
- Lamentations 1:1 புலம்பல் 1:1ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!
- Nahum 2:2 நாகூம் 2:2வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடையதிராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.
- Ezekiel 36:3 எசேக்கியேல் 36:3நீ தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
- Jeremiah 51:49 எரேமியா 51:49பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களைவிழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும்கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.
- Proverbs 1:12 நீதிமொழிகள் 1:12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
Original words (Hebrew)
- Nebuchadrezzar · H5019נְבוּכַדְנֶאצַּר Nᵉbûwkadneʼtstsar
- king · H4428מֶלֶךְ melek
- Babylon · H894בָּבֶל Bâbel
- devoured · H398אָכַל ʼâkal
- crushed · H2000הָמַם hâmam
- made · H3322יָצַג yâtsag
- empty · H7385רִיק rîyq
- vessel · H3627כְּלִי kᵉlîy
- up · H1104בָּלַע bâlaʻ
- dragon · H8577תַּנִּין tannîyn
- filled · H4390מָלֵא mâlêʼ
- belly · H3770כְּרֵשׂ kᵉrês
- delicates · H5730עֵדֶן ʻêden
- out · H1740דּוּחַ dûwach
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.