Jonah 1:2 in Tamil
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினதுஎன்றார்.
Nee ezhunthu magaa nagaramaagiya ninivaekkup poy, atharku virothamaagap pirasangi; avarkaludaiya akkiramam en samugaththil vanthu ettinathuendraar.
Jonah 1:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்; அவர்களுடைய அக்கிரமம் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது என்றார்.
- Open Tamil Contemporary Version
- “நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.”
- Tamil Easy Reading Version
- “நினிவே ஒரு பெரிய நகரம். நான் அங்கே மக்கள் செய்து கொண்டிருக்கிற அநேக தீமைகைளப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அந்நகரத்திற்குப் போய் அம்மக்களிடம் அத்தீமைகளை நிறுத்தும்படிச் சொல்” என்றார்.
Jonah 1:2 in English
- King James Version (KJV)
- Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.
- World English Bible (WEB)
- “Arise, go to Nineveh, that great city, and preach against it, for their wickedness has come up before me.”
- American Standard Version (ASV)
- Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.
- Bible in Basic English (BBE)
- Up! go to Nineveh, that great town, and let your voice come to it; for their evil-doing has come up before me.
- Darby Translation (DBY)
- Arise, go to Nineveh, the great city, and cry against it; for their wickedness is come up before me.
- Webster's Bible (WBS)
- Arise, go to Nineveh, that great city, and cry against it; for their wickedness is come up before me.
- Young's Literal Translation (YLT)
- 'Rise, go unto Nineveh, the great city, and proclaim against it that their wickedness hath come up before Me.'
Read in context
- 1அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
- 2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினதுஎன்றார்.
- 3அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
- 4கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.
Cross references
- Genesis 18:20–21 ஆதியாகமம் 18:20–21பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
- Genesis 10:11 ஆதியாகமம் 10:11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
- Nahum 1:1 நாகூம் 1:1நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
- Isaiah 58:1 ஏசாயா 58:1சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
- Jonah 3:2 யோனா 3:2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
- Zephaniah 2:13–15 செப்பனியா 2:13–15அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமானஸ்தலமாக்குவார். அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடையசிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார். நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய்வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
- Jonah 4:11 யோனா 4:11வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
- Revelation 18:5 வெளிப்படுத்தின விசேஷம் 18:5அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.
- Ezekiel 3:5–9 எசேக்கியேல் 3:5–9விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ? இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும்கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக்கலங்காமலும் இரு என்றார்.
- Jeremiah 1:7–10 எரேமியா 1:7–10ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்என்று கர்த்தர் சொல்லி, கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
- 2 Kings 19:36 2 இராஜாக்கள் 19:36அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான்.
- Ezekiel 2:7 எசேக்கியேல் 2:7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.