Jonah 4:2 in Tamil
கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
Karththarai nokki vinnappam panni: aa karththaavae, naan en thaesaththil irukkumbothae naan ithais sollavillaiyaa? ithinimiththamae naan munnamae tharsheesukku odipponaen; neer irakkamum mana urukkamum neediya saanthamum miguntha kirubaiyumullavarum, theengukku manasthaabappadugiravarumaana thaevanendru arivaen.
Jonah 4:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ யெகோவாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினாலேயே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்கிற்கு மனமிரங்குகிறவருமான தேவனென்று அறிவேன்.
- Open Tamil Contemporary Version
- அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும்.
- Tamil Easy Reading Version
- யோனா கர்த்தரிடம் முறையிட்டு, “நான் இது நடக்குமென்று அறிவேன்! நான் எனது சொந்த நாட்டில் இருந்தேன். நீர் என்னை இங்கு வரச்சொன்னீர். அந்த நேரத்தில், இப்பாவ நகரத்திலுள்ள மக்களை நீர் மன்னிப்பீர் என்பதை நான் அறிவேன். எனவே நான் தர்ஷிசுக்கு ஓடிப்போக முடிவுசெய்தேன். நீர் இரக்கமுள்ள தேவன் என்பது எனக்குத் தெரியும்! நீர் இரக்கங்காட்டி மக்களைத் தண்டிக்கமாட்டீர் என்பதை நான் அறிவேன்! நீர் கருணை நிறைந்தவர் என்பதை அறிவேன். இம்மக்கள் பாவம் செய்வதை நிறுத்தினால், நீர் அவர்களை அழிக்கவேண்டும் என்னும் திட்டத்தை மாற்றிக்கொள்வீர் என்றும் நான் அறிவேன்.
Jonah 4:2 in English
- King James Version (KJV)
- And he prayed unto the LORD, and said, I pray thee, O LORD, [was] not this my saying, when I was yet in my country? Therefore I fled before unto Tarshish: for I knew that thou [art] a gracious God, and merciful, slow to anger, and of great kindness, and repentest thee of the evil.
- World English Bible (WEB)
- He prayed to the LORD, and said, “Please, LORD, wasn’t this what I said when I was still in my own country? Therefore I hurried to flee to Tarshish, for I knew that you are a gracious God and merciful, slow to anger, and abundant in loving kindness, and you relent of doing harm.
- American Standard Version (ASV)
- And he prayed unto Jehovah, and said, I pray thee, O Jehovah, was not this my saying, when I was yet in my country? Therefore I hasted to flee unto Tarshish; for I knew that thou art a gracious God, and merciful, slow to anger, and abundant in lovingkindness, and repentest thee of the evil.
- Bible in Basic English (BBE)
- And he made prayer to the Lord and said, O Lord, is this not what I said when I was still in my country? This is why I took care to go in flight to Tarshish: for I was certain that you were a loving God, full of pity, slow to be angry and great in mercy, and ready to be turned from your purpose of evil.
- Darby Translation (DBY)
- And he prayed unto Jehovah, and said, Ah, Jehovah, was not this my saying when I was yet in my country? Therefore I was minded to flee at first unto Tarshish; for I knew that thou art a gracious God, and merciful, slow to anger, and of great loving-kindness, and repentest thee of the evil.
- Webster's Bible (WBS)
- And he prayed to the LORD, and said, I pray thee, O LORD [was] not this my saying, when I was yet in my country? Therefore I fled before to Tarshish: for I knew that thou [art] a gracious God, and merciful, slow to anger, and of great kindness, and repentest of the evil.
- Young's Literal Translation (YLT)
- and he prayeth unto Jehovah, and he saith, 'I pray Thee, O Jehovah, is not this my word while I was in mine own land — therefore I was beforehand to flee to Tarshish — that I have known that Thou [art] a God, gracious and merciful, slow to anger, and abundant in kindness, and repenting of evil?
Read in context
- 1யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
- 2கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
- 3இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
- 4அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோஎன்றார்.
Cross references
- Psalm 86:15 சங்கீதம் 86:15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
- Exodus 34:6–7 யாத்திராகமம் 34:6–7கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
- Numbers 14:18–19 எண்ணாகமம் 14:18–19என் ஆண்டவருடைய வல்லமைபெரிதாய் விளங்குவதாக. உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்குமன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
- Joel 2:13–14 யோவேல் 2:13–14நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்குமனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
- Psalm 145:8 சங்கீதம் 145:8கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
- Psalm 86:5 சங்கீதம் 86:5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
- Micah 7:18 மீகா 7:18தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வை யார்.
- Exodus 32:14 யாத்திராகமம் 32:14அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
- Jeremiah 18:8 எரேமியா 18:8நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத்திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
- Psalm 78:38 சங்கீதம் 78:38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
- Amos 7:3 ஆமோஸ் 7:3கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லைஎன்றார்.
- Hosea 11:8–9 ஓசியா 11:8–9எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. என் உக்கிர கோபத்தின்படியேசெய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாகவரேன்.
Original words (Hebrew)
- prayed · H6419פָּלַל pâlal
- said · H559אָמַר ʼâmar
- pray · H577אָנָּא ʼânnâʼ
- saying · H1697דָּבָר dâbâr
- country · H127אֲדָמָה ʼădâmâh
- fled · H1272בָּרַח bârach
- before · H6923קָדַם qâdam
- Tarshish · H8659תַּרְשִׁישׁ Tarshîysh
- knew · H3045יָדַע yâdaʻ
- gracious · H2587חַנּוּן channûwn
- God · H410אֵל ʼêl
- merciful · H7349רַחוּם rachûwm
- slow · H750אָרֵךְ ʼârêk
- anger · H639אַף ʼaph
- great · H7227רַב rab
- kindness · H2617חֵסֵד chêçêd
- repentest · H5162נָחַם nâcham
- evil · H7451רַע raʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.