Joshua 9:1 in Tamil
யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடையசகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
Yorthaanukku ippuraththilae malaigalilum pallaththaakkugalilum leebanonukku ethiraana periya samuththiraththin karaiyoramengumulla aeththiyarum emoriyarum kaanaaniyarum perisiyarum aeviyarum eboosiyarumaanavarkaludaiyasagala raajaakkalum athaik kaelvippattabothu,
Joshua 9:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோர்தான் நதிக்கு மேற்கு திசையிலுள்ள மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான மத்திய தரை சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியர்களும், எமோரியர்களும், கானானியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் அவர்களுடைய எல்லா ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
- Open Tamil Contemporary Version
- யோர்தானுக்கு மேற்கேயிருந்த அரசர்கள் இச்செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இவர்கள் மலைநாட்டின் மேற்கேயுள்ள மலையடிவாரத்திலும், மத்திய தரைக்கடல் கரையோரம் முழுவதிலும் லெபனோன் வரையும் வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய நாடுகளின் அரசர்கள்.
- Tamil Easy Reading Version
- யோர்தான் நதியின் மேற்கிலுள்ள எல்லா அரசர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டார்கள். அவர்கள் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரின் அரசர்கள் ஆவார்கள். அவர்கள் மலைகளிலும், சம வெளிகளிலும் வாழ்ந்தனர். லீபனோன் வரைக்குமுள்ள மத்தியதரைக் கடலோரமாக அவர்கள் வாழ்ந்தனர்.
Joshua 9:1 in English
- King James Version (KJV)
- And it came to pass, when all the kings which [were] on this side Jordan, in the hills, and in the valleys, and in all the coasts of the great sea over against Lebanon, the Hittite, and the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite, heard [thereof;]
- World English Bible (WEB)
- When all the kings who were beyond the Jordan, in the hill country, and in the lowland, and on all the shore of the great sea in front of Lebanon, the Hittite, the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite, heard of it
- American Standard Version (ASV)
- And it came to pass, when all the kings that were beyond the Jordan, in the hill-country, and in the lowland, and on all the shore of the great sea in front of Lebanon, the Hittite, and the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite, heard thereof;
- Bible in Basic English (BBE)
- Now on hearing the news of these things, all the kings on the west side of Jordan, in the hill-country and the lowlands and by the Great Sea in front of Lebanon, the Hittites and the Amorites, the Canaanites, the Perizzites, the Hivites, and the Jebusites,
- Darby Translation (DBY)
- And it came to pass when all the kings who were on this side the Jordan, in the hill-country, and in the lowland, and along all the coast of the great sea as far as opposite to Lebanon, the Hittite, and the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite, heard [of it],
- Webster's Bible (WBS)
- And it came to pass, when all the kings who [were] on this side Jordan, in the hills, and in the valleys, and in all the coasts of the great sea over against Lebanon, the Hittite, and the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite heard [these things] ,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, when all the kings who [are] beyond the Jordan, in the hill-country, and in the low-country, and in every haven of the great sea, over-against Lebanon, the Hittite, and the Amorite, the Canaanite, the Perizzite, the Hivite, and the Jebusite, hear —
Read in context
- 1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடையசகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
- 2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.
- 3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
Cross references
- Numbers 34:6 எண்ணாகமம் 34:6மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
- Exodus 3:17 யாத்திராகமம் 3:17நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடையதேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
- Joshua 3:10 யோசுவா 3:10பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:
- Exodus 23:23 யாத்திராகமம் 23:23என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
- Genesis 15:18–21 ஆதியாகமம் 15:18–21அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
- Joshua 11:10–11 யோசுவா 11:10–11அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான்.
- Deuteronomy 7:1 உபாகமம் 7:1நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
- Deuteronomy 3:25 உபாகமம் 3:25நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.
- Joshua 11:1–5 யோசுவா 11:1–5ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும், வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும், கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான். அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள். இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணவந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள்.
- Exodus 23:31 யாத்திராகமம் 23:31சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
- Joshua 13:5 யோசுவா 13:5கிப்லியரின் நாடும், சூரியோதயப்புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ளலீபனோன் முழுவதும்,
- Joshua 22:7 யோசுவா 22:7மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:
Original words (Hebrew)
- kings · H4428מֶלֶךְ melek
- side · H5676עֵבֶר ʻêber
- Jordan · H3383יַרְדֵּן Yardên
- hills · H2022הַר har
- valleys · H8219שְׁפֵלָה shᵉphêlâh
- coasts · H2348חוֹף chôwph
- great · H1419גָּדוֹל gâdôwl
- sea · H3220יָם yâm
- against · H4136מוּל mûwl
- Lebanon · H3844לְבָנוֹן Lᵉbânôwn
- Hittite · H2850חִתִּי Chittîy
- Amorite · H567אֱמֹרִי ʼĔmôrîy
- Canaanite · H3669כְּנַעַנִי Kᵉnaʻanîy
- Perizzite · H6522פְּרִזִּי Pᵉrizzîy
- Hivite · H2340חִוִּי Chivvîy
- Jebusite · H2983יְבוּסִי Yᵉbûwçîy
- heard · H8085שָׁמַע shâmaʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.