Lamentations 3:1 in Tamil
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
Aandavarudaiya sinaththin milaatrinaal undaana sirumaiyaik kanda purushan naan.
Lamentations 3:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
- Open Tamil Contemporary Version
- அவருடைய கோபத்தின் பிரம்பினால் உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
- Tamil Easy Reading Version
- நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன். கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார். நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
Lamentations 3:1 in English
- King James Version (KJV)
- I [am] the man [that] hath seen affliction by the rod of his wrath.
- World English Bible (WEB)
- I am the man who has seen affliction by the rod of his wrath.
- American Standard Version (ASV)
- I am the man that hath seen affliction by the rod of his wrath.
- Bible in Basic English (BBE)
- I am the man who has seen trouble by the rod of his wrath.
- Darby Translation (DBY)
- I am the man that hath seen affliction by the rod of his wrath.
- Webster's Bible (WBS)
- I [am] the man [that] hath seen affliction by the rod of his wrath.
- Young's Literal Translation (YLT)
- I [am] the man [who] hath seen affliction By the rod of His wrath.
Read in context
- 1ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
- 2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
- 3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
Cross references
- Psalm 88:7 சங்கீதம் 88:7உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
- Job 19:21 யோபு 19:21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
- Psalm 88:15–16 சங்கீதம் 88:15–16சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன். உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடையபயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
- Jeremiah 15:17–18 எரேமியா 15:17–18நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர். என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
- Isaiah 53:3 ஏசாயா 53:3அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரை விட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
- Jeremiah 38:6 எரேமியா 38:6அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
- Lamentations 1:12–14 புலம்பல் 1:12–14வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமானகோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டுவிழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப்போகிறேன். என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனைவிழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக்கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
- Psalm 71:20 சங்கீதம் 71:20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
- Jeremiah 20:14–18 எரேமியா 20:14–18நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன். அந்த மனுஷன், கர்த்தர் மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன். என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக்கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன? நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.