Leviticus 14:35 in Tamil
அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
Antha veettirku udaiyavan vanthu, veettilae thosham vanthirukkirathaagath thondrugirathu endru aasaariyanukku arivikkakkadavan.
Leviticus 14:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
- Open Tamil Contemporary Version
- அந்த வீட்டிற்குச் சொந்தக்காரன் ஆசாரியனிடம் சென்று, ‘என் வீட்டிலே பூஞ்சணம்போல் காணப்படுகிற ஒன்றைக் கண்டேன்’ என்று அறிவிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
Leviticus 14:35 in English
- King James Version (KJV)
- And he that owneth the house shall come and tell the priest, saying, It seemeth to me [there is] as it were a plague in the house:
- World English Bible (WEB)
- then he who owns the house shall come and tell the priest, saying, ‘There seems to me to be some sort of plague in the house.’
- American Standard Version (ASV)
- then he that owneth the house shall come and tell the priest, saying, There seemeth to me to be as it were a plague in the house.
- Bible in Basic English (BBE)
- Then let the owner of the house come and say to the priest, It seems to me that there is a sort of leper's disease in the house.
- Darby Translation (DBY)
- then he whose house it is shall come and tell the priest, saying, It seemeth to me like a plague in the house;
- Webster's Bible (WBS)
- And he that owneth the house shall come and tell the priest, saying, it seemeth to me [there is] as it were a plague in the house:
- Young's Literal Translation (YLT)
- then hath he whose the house [is] come in and declared to the priest, saying, As a plague hath appeared to me in the house;
Read in context
- 33பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 34நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,
- 35அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
- 36அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
- 37அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால்,
Cross references
- Psalm 91:10 சங்கீதம் 91:10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
- Zechariah 5:4 சகரியா 5:4அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
- Deuteronomy 7:26 உபாகமம் 7:26அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது.
- Joshua 7:21 யோசுவா 7:21கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறுவெள்ளிச்சேக்கைலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும்நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
- 1 Samuel 3:12–14 1 சாமுவேல் 3:12–14நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவதுநிவர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக் குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
- Proverbs 3:33 நீதிமொழிகள் 3:33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம்இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
- 1 Kings 13:34 1 இராஜாக்கள் 13:34யெரொபெயாமின் வீட்டாரை பூமி யின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.