Leviticus 25:49 in Tamil
அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
Avanudaiya pithaavin sagotharanaavathu, anthas sagotharanudaiya puththiranaavathu, avan kudumbaththilulla avanais saerntha inaththaaril evanaavathu avanai meedkalaam; thannaal koodumaanaal, thannaiththaanae meettukkollalaam.
Leviticus 25:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய சிறிய தகப்பனோ அல்லது சிறிய தகப்பனுடைய மகனோ அல்லது அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த இரத்த உறவினனோ அவனை மீட்டுக்கொள்ளலாம். அல்லது அவன் செழிப்படையும்போது தன்னைத்தானே மீட்டுக்கொள்ளவும் முடியும்.
- Tamil Easy Reading Version
- அவனது சித்தப்பாவோ, பங்காளிகளோ, அவனைத் திரும்ப வாங்கலாம். ஆனால் அவனுக்குப் போதுமான பணம் இருந்தால் தானே அதனைக் கொடுத்துவிட்டு சுதந்திரம் பெற்றுவிடலாம்.
Leviticus 25:49 in English
- King James Version (KJV)
- Either his uncle, or his uncle’s son, may redeem him, or [any] that is nigh of kin unto him of his family may redeem him; or if he be able, he may redeem himself.
- World English Bible (WEB)
- or his uncle, or his uncle’s son, may redeem him, or any who is a close relative to him of his family may redeem him; or if he has grown rich, he may redeem himself.
- American Standard Version (ASV)
- or his uncle, or his uncle’s son, may redeem him, or any that is nigh of kin unto him of his family may redeem him; or if he be waxed rich, he may redeem himself.
- Bible in Basic English (BBE)
- Or his father's brother, or the son of his father's brother, or any near relation; or if he gets money, he may make himself free.
- Darby Translation (DBY)
- Either his uncle or his uncle's son may redeem him, or one of his next relations of his family may redeem him; or if his means be sufficient, he may redeem himself.
- Webster's Bible (WBS)
- Either his uncle, or his uncle's son may redeem him, or [any] that is nigh of kin to him of his family, may redeem him; or if he is able, he may redeem himself.
- Young's Literal Translation (YLT)
- or his uncle, or a son of his uncle, doth redeem him, or any of the relations of his flesh, of his family, doth redeem him, or — his own hand hath attained — then he hath been redeemed.
Read in context
- 47உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
- 48அவன் விலைப்பட்டுப்போனபின்திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
- 49அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
- 50அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யபூ⟨p⟩லி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
- 51இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.