Numbers 1:2 in Tamil
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர் களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.
Neengal isravael puththirarin muzhus sabaiyaayirukkira avarkal pithaakkaludaiya veettu vamsangalilulla purushar kalaagiya sagala thalaigalaiyum paerpaeraaga ennith thogaiyaetrungal.
Numbers 1:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு.
Numbers 1:2 in English
- King James Version (KJV)
- Take ye the sum of all the congregation of the children of Israel, after their families, by the house of their fathers, with the number of [their] names, every male by their polls;
- World English Bible (WEB)
- “Take a census of all the congregation of the children of Israel, by their families, by their fathers’ houses, according to the number of the names, every male, one by one,
- American Standard Version (ASV)
- Take ye the sum of all the congregation of the children of Israel, by their families, by their fathers’ houses, according to the number of the names, every male, by their polls;
- Bible in Basic English (BBE)
- Take the full number of the children of Israel, by their families, and by their fathers' houses, every male by name;
- Darby Translation (DBY)
- Take the sum of the whole assembly of the children of Israel, after their families, according to their fathers' houses, by the number of the names, every male, according to their polls;
- Webster's Bible (WBS)
- Take ye the sum of all the congregation of the children of Israel, after their families by the house of their fathers, with the number of [their] names, every male by their poll:
- Young's Literal Translation (YLT)
- 'Take ye up the sum of all the company of the sons of Israel by their families, by the house of their fathers, in the number of names — every male by their polls;
Read in context
- 1இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
- 2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர் களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.
- 3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
- 4ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்.
Cross references
- Exodus 30:12 யாத்திராகமம் 30:12நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும்பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
- Exodus 38:26 யாத்திராகமம் 38:26எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
- Numbers 1:18 எண்ணாகமம் 1:18இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
- Numbers 1:22 எண்ணாகமம் 1:22சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
- Numbers 26:2–4 எண்ணாகமம் 26:2–4இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார். அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி: கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
- 1 Chronicles 27:23–24 1 நாளாகமம் 27:23–24இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை. செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீதுராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.
- 2 Samuel 24:1–3 2 சாமுவேல் 24:1–3கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது; இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான். அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
- 1 Chronicles 21:1–2 1 நாளாகமம் 21:1–2சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித்தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
- Exodus 1:1–5 யாத்திராகமம் 1:1–5எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள். யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
- Numbers 26:63–64 எண்ணாகமம் 26:63–64மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும்யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே. முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
- Genesis 49:1–3 ஆதியாகமம் 49:1–3யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
- Numbers 1:26–54 எண்ணாகமம் 1:26–54யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திறகுப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர். யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்துநானூறுபேர். தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும், லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கக்கடவர்கள். வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளையத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள். இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
Original words (Hebrew)
- Take · H5375נָשָׂא nâsâʼ
- sum · H7218רֹאשׁ rôʼsh
- congregation · H5712עֵדָה ʻêdâh
- children · H1121בֵּן bên
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- house · H1004בַּיִת bayith
- fathers · H1אָב ʼâb
- number · H4557מִסְפָּר miçpâr
- names · H8034שֵׁם shêm
- male · H2145זָכָר zâkâr
- polls · H1538גֻּלְגֹּלֶת gulgôleth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.